பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் - * 409 என்ற நூற்பாவால் இளையோர்க்குரிய கூற்றுகளாகத் தொகுத்துக் கூறுவர். - உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே". என்று மேலும் அவர்கள் செயல்களைக் குறிப்பிடுவர். நம்பியாரும் அவர்கட்கு உரிய செயல்களை, மடந்தையை வாயில் வேண்டலும் வாயில் உடன்படுத் தலும்அவள் ஊடல் தீர்த்தலும் கொற்றவர்க் குணர்த்தலும் குற்றேவல் செய்தலும் சென்றுமுன் வரவு செப்பலும் அவன்திறம் ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழிஇயல்பு கூறலும் வழியிடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழிலென மொழிப." என்ற நூற்பாவால் தொகுத்து உரைப்பர். இச்செயல்கட்கு இலக்கியம் காண்டல் அரிதாக உள்ளது. உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் விருந்தும் பெறுகுநள்’’ என்ற நெடுந்தொகைப் பாடலை இளையோர் கூற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர். அதன் கருத்தை விளக்குவோம். வினை முற்றிய தலைமகன் வீடு திரும்புகின்றான். அவனுக்குக் குற்றேவல் புரியும் இளையர் கூறுகின்றனர்: விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரசிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த வண்டுண் நறுவி துமித்த நேமி தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள் நிரைநெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லும் நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே." [இழை-அணி, பணை-மூங்கில்; அரிவை-பெண் (தலைவி): வெறி-மணம்; கொள்புதாய்-கொண்டு பரந்து; சிரல் 44. டிெ-30 (இளம்) 45. நம்பி அகப்-98 46. அகம்-324