பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருந்திணை 30} (பாயல் படுக்கை, துரக்கம்; மாயவன்-திருமால்; திருஇலக்குமி; ஆயிழை-தலைவி.) என்பது நல்லந்துவனார் காட்டும் ஒரு தலைவியின் நிலை. தன் உறக்கத்தைக் கெடுத்துப் போன தலைவன் திரும்பிவரக் கண்ட தும் தலைவி அவனை ஆரத் தழுவுகின்றாள். அவளது துயர் கதிரவனைக் கண்ட இருள்போல் பறந்தோடுகின்றது. முன்னைய நன்னிலைகளையெல்லாம் பெறுகின்றாள். இதில் திருமால் மார்பை 'அகலகில்லேன் இறையும் என்று ஒன்றி உறையும் அலர்மேல் மங்கையை உவமையாக்கியதனால் இளந்தலைவியின் வேட்கை யும் தூய்மையும் கற்பும் பொட்பும் பெறப்படும். தலைவியின் நாண் கடந்த செயல்களால் அவள் கற்பிழந்தாள் என்று ஆகாது. உள்ளங் கவர்ந்த ஒருவனையே ஊரறிய அழைக்கின்றாள்; நாடெல்லாம் கேட்கக் கதறிக்கூப்பிடுகின்றாள். இஃது ஒருவகையில் காமம் மிக்க கழிபடர் கிளவியும் ஆகும். நல்லந்துவனாரின் தலைவியைப்பற்றிய சொல்லோவியங்கள் யாவும் தலைவியின் மாசற்ற மனநிலையையே காட்டுகின்றன. ஒருத்தியின் மனநிலையைக் காட்டுவது இது. இன்னுயிர் அன்னார்க்கு எனைத்தொன்றும் திதின்மை - என்னுயிர் காட்டாதே மற்று." இதில் 'என்னைவிட்டு அகன்றவன் யாதொரு நோயும் உறவில்லை; யாதொரு தீங்கினையும் எய்தவில்லை; நான் உயிரோடிருப்பதுவே அதற்குச் சான்றாகும்’ என்று உயிரொருமை கூறுகின்றாள். மேலும் அவள், ! . ஈண்டுநீர் ஞாலத்துள் எங்கேள்வர் இல்லாயின் மாண்ட மனம்பெற்றார் மாசில் துறக்கத்து வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின் யாண்டும் உடையேன் இசை" (ஞாலம்-உலகம், கேள்வர்-தலைவர்: மாண்ட-மாட்சிமைப் பட்ட, எய்துதல்-அடைதல்: யாண்டும்-எப்பொழுதும்: இசை-புகழ்! 39. டிெ-143. 40. டிெ-143.