பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்-21 கைக்கிளை அகத்திணையில் அடங்கிய ஏழு திணைகளையும் எண்ணும் வரிசையில் கைக்கிளை முதலிடம் பெற்றாலும் அதன் இலக்கணம் ஐந்திணை விரிவுக்குப் பின்னரே தொல்காப்பியத்தில் இடம் பெறு கின்றது. இதனால் இதன் சிறுநிலை அறியப்பெறும். தொல் காப்பியர், . . காமஞ் சாலா இளமை யோள்வயின் எமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளை குறிப்பே.' (சாலா - அமையாத ஏமம் - மருந்து இடும்பை - துன்பம்; புல்லி - பொருந்தி.) * என்று இதற்கு இலக்கணம் கூறுவர். பருவம் எய்தாத நங்கை யொருத்தியை (பருவம் எய்தின்வளாக மயங்கி) ஒருவன் காதல் கொள்கின்றான்; காதல் துன்பமும் படுகின்றான்; நன்மை எனவும் தீமை எனவும் அவளைத் தன்னோடு உறவு படுத்திச் செருக்குறு கின்றான்; அவளிடமிருந்து மறுமொழியாக ஒரு சொல்லும் பெற்றான் இலன்; எனினும் தானே சொல்லிச் சொல்லி இன்புறு கின்றான். இது நூற்பாவின் நேர் பொருள். அகத்திணையைச் சார்ந்த கைக்கிளைக்கு ஒரே ஒரு துறைதான் உண்டு என்பது "புல்லித் தோன்றும் கைக்கிளைக்குறிப்பே என்பதால் பெறப்படும். இத்திணை விரிவற்றது. துறை பல பெறாதது என்பது இதன் பொருளாகும். கைக்குடை, கையேடு, கைவாள், கைத்தடி, கைக் குழந்தை, கைமாற்று, கையடக்கம், கைவண்டி, கைக்கடிகாரம் 1. அகத்திணை . 53