பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு பற்றிய விளக்கம் 20] இருக்கலாம் என்று காலத்திற்கேற்ப, நிலவும் நிலைக்கேற்ப அமைத் துக் கொள்ளலாம் என நெகிழ்ந்து கொடுக்கும் சமுதாயமாகும். காதற் களவினர் எவ்வாறேனும் ஒரு குடியாகிச் சமுதாய உறுப்பின ராதல் வேண்டும் எனப்பொறுப்புடன் திருமணவாயிலை எல்லோர்க் கும் நல்வரவு கூறும் வாயிலாக அமைந்திருந்தது. இத்தகைய அறமு டைய எளிய வாயிலைஐங்குறுநூற்றுப்பாடலொன்றால்அறியலாம். தோழியால் ஒம்படை செய்யப்பெற்று உடன் போகிய தலைவன் தலைவியைத்தன் ஊரில் உலகத்தார்உணரும்படிக்கரண வகையால் திருமணம் புரிந்து கொண்டனன். இச் செய்தியைத் தோழி அறிந்திருந்தாள். பின்னொரு நாள் தோழி தலைவனையும் தலைவியையும் காண்டற்கு ஆங்குச் சென்றிருந்தபொழுது அவளைக் கண்ட தலைவன் மகிழ்ந்து தான் முறைப்படித் தலைவியை மணந்து கொண்ட செய்தியைக் கூறி அச் செய்தியை உறவினருக்கும் அறிவிக்குமாறு வேண்டினன். அதற்கு அவள், வரைந்தனை நீ எனக் கேட்டுயான் உரைத்தனன் அல்லெனோ அஃதென் யாங்க்கே’’ எனத் தன் அன்னைக்கு முன்னரே தெரிவித்து விட்டதாக மொழிந்தாள் என்பதனால் பண்டைத் தமிழகத்தில் இனிய எளிய மணமுறை நிலவியமை தெளிவாகின்றது. இப்பாடலின் முற்பகுதியிலுள்ள உள்ளுறை இச் செய்தியை மிக அருமையாக உணர்த்துகின்றது. - - - களவு கற்பு என்ற ஐந்திணைக் கைகோள் இரண்டனுள் பின்னது எல்லோரும் அடைய வேண்டிய பேரறமாகும். கற்பு களவு போல் இலக்கிய நயத்திற்கும் கற்பனை வளத்திற்கும் இடந்தராது என்று கருத இடம் உண்டு. ஆயினும், பாடுவதற்குத் தரமான பொருள் இல்லையென்று துணிவது எளிதன்று. குறிக் கோள் உடைய புலவர்கள் அதனைப் பதிய வைப்பதற்குக் கையாளும் உத்தி முறைகள் மிகவும் வியப்பூட்டுவனவாகும். கற்பொழுக்கத்தை விடச் சிறந்த குறிக்கோள்-சமுதாய நெறிவேறொன்று இருக்க முடியுமா? சங்க இலக்கியத்தில் இத் திணையைப் பாடியவர் தொகை 233 ஆகவும் பாடற்றொகை 966 ஆகவும் இருப்பதை நோக்குங்கால் சங்கச் சான்றோர்கள் களவுத் துறைகளைப் போலவே கற்புத்துறைகளையும் வளமான செய்யுட் களால் பாட மதித்தனர் என்பது தெளிவாக அறியக் கிடக் கின்றது. 13. ஐங்குறு 280