பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 191 நிகழும் உரிப்பொருள்களேயன்றி பிறருடன் தொடர்புடையன அல்ல. பாலை என்பது, பிரிதலும் பிரிதல் நிமித்தமும். உடன் போக்கு பிரிதல் நிமித்தத்தின்பாற்படும். உடன்போக்கில் இருவர் கூடியிருப்பினும், இன்னும் மணமாகாமையின், பிரிவோமோ பெற்றோரால் பிரிக்கப்பெறுவோமோ என்ற பிரிவுணர்ச்சி இருவர் தம் உள்ளத்தும் ஒடிக்கொண்டிருக்கும். இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்களுர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை' (கலங்களுர் - மிக்கதுன்பம்; கெளவை - அலர்! என்ற தொல்காப்பியத்தாலும் உடன் போக்கில் இருவரிடையேயும் உள்ளத் துயர் உண்டு என்பது தெளியப்படும். தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லும்பொழுது இடைவெளியில் தலைவியின் சுற்றத்தார் திரண்டு வந்து தலைவனை மேற்செல்லா வண்ணம் தடுத்து நிற்பர். அப்பொழுது தலைவி அவர்களுடைய செயலுக்கு மனம் ஒவ்வாது தன் காதலனைச் சார்ந்து நிற்பள். அதனைக் கண்ட சுற்றத்தார் தலைவியின் செயல் அறநெறிப் பட்டதாதலின், தாம் அதற்கு யாதொரு இடையூறும் விளை வித்தல் கூடாதென்றும், அங்ஙனம் செய்யினும் தலைவி தலைவனை மணம் முடித்துக் கொள்ளுதல் ஒருதலை என்றும் கருதி, அவர்கள் உடன்போக்கிற்கு உடன்பட்டுத் தம் ஊர் நோக்கி மீள்வர். இச்செய்தியை மேற்குறிப்பிட்ட நூற்பா நுவல்வதாகும். அங்ஙனம் தமர் மீண்டதும் தலைவன் தலைவிக்குத் தம்முடைய ஒழுக்கம் தமக்கு மட்டுமன்றிப் பழமையாக வழங்கும் உலகியல் என்று கூறி அவளைத் தெருட்டியும், வழி இளைப்புத் தீர அவளை மருட்டியும் உடன் கொண்டு சென்று தன் பதியை அடைவான்; பிறகு வதுவை மணம் புரிந்து கொள்வான். இவ்வாறு களவுப் புணர்ச்சிக்குரிய தலைவியைத் தலைவன் உடன் கொண்டு செல்லுதல் பண்டைய தமிழ் வழக்காக இருந்தது. அஃது உயர்ந்த அறநெறியாகவும் கருதப்பெற்றது. சுரநளிை இனிய வாகுக தில்ல அறநெறி இதுவெனத் தெளிந்தஎன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.”* 22 அகத்திணை - 44 222. ஐங்குறு - 371