பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 66 அகத்திணைக் கொள்கைகள் கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர் கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்' (பார்வல்-பார்வை: பருவரல்-துன்பம்; ஞெண்டு-நண்டு; கண்டல்-தாழை; அளை-வளை, செலீஇயர்-செல்லும் பொருட்டு, அண்டர் - இடையர்: கதழும் - விரைந்து செல்லும்.) என்பது உள்ளுறை. மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையை அஞ்சிய நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குட் செல்லும்பொருட்டு இடையரால் பிணிக்கப்பெற்ற கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப்போல் விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடல்துறையை உடையவன்' என்பது செய்யுட்பகுதியின் பொருளாகும். கொக்கின் பார்வைக்கு அஞ்சிய நண்டு வளைக்குள் தங்குதல் போல, ஊராருடைய அலருக்கு அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற் குரியவன் என்ற பொருளை இந்த உள்ளுறை உணர்த்துகின்றது. வரைந்து கொள்ளாமல் நெடுநாள் களவொழுக்கத்தில் ஒழுகி வருகின்றான் தலைவன். ஒருநாள் அவன் சிறைப்புறத்திலிருக்குங் கால் தோழி அவன் கேட்குமாறு கூறுகின்றாள்: "இவர் வரைந்து கொள்ளாமல் களவு நெறியில் ஒழுகுதல் அச்சம் தருதற்குரியது. இங்ஙனம் நம் உள்ளத்தே அச்சம் தரும்படி வருவதினும் வாரா தமைவதே நலம் தரும்’ என்பதாக. இதனால் களவுப் புணர்ச்சி யினால் வரும் அச்சத்தையும் அது பெறாவிடில் தலைவிக்கு உண்டாகும் துன்பத்தையும் வெளியிட்டு, இவ்விரண்டும் நீங்க விரைவில் வரைந்து கொள்ளுதலே தக்கதென்னும் கருத்தைக் குறிப்பிடுவாளாயினள். (3) செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் பெருவரை நீழல் உகளும் நாடன்' |வரைமலை; சேர்க்கை-பக்கம்; வருடைமான்-எட்டுக் கால் களையுடைய தொரு விலங்கு; மறி-குட்டி, சுரைபொழி தீம்பால்-தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பால்; ஆர-வயிறு நிறைய மாந்தி-உண்டு; பெருவரை-பெரிய மலைப் பக்கத்தில்; உகளும்-துள்ளும்) 2டிெ 117 21. டிெ-187.