பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 அகத்திணைக் கொள்கைகள் இவற்றைக் கேட்ட ஆய்மகள் காதலருள் பாலிக்கின்றாள். மறுமொழியும் தருகின்றாள்: 'நீ அத்தன்மையுடையையோ? பலரும் திரிகின்ற மன்றத்தில் எதிர்ப்பட்டபொழுதே புணர்ச்சி வேண்டுகின்றாய்; புணர்ச்சியின் றாயின் உயிர் வாழேன் என்கின்றாய். இவ்விடத்து நாம் நின்றால் எம் சுற்றத்தார் காண்பர்; நாளையும் புலத்திற்குக் கன்றுகளை ஒட்டிச் செல்வேன்; ஆண்டு வந்து உனக்கு உற்றவற்றை மேலும் சொல்லுவாய்: ஈண்டு இனி நில்லாது ஏகுக' என்று குறியிடமும் அமைக்கின்றாள் (கலி-110). - மோர்விற்றுச் செல்லும் ஆயமகள் ஒருத்தியை இடைமறித்துப் பேசுகின்றான் ஆயமகன் ஒருவன். "மோர் விற்றுச் செல்லும் சிறு நங்காய், நீ மோர் விற்றுத் திரும்பும்போது செம்முல்லை நெருங்கினதோர் காட்டினிடத்து, சிற்றாற்றின் அருகில், மாவடுவைப் பிளந்தாலொத்த நின் கண் விழியால் என் நெஞ்சை அடிமை கொண்டு விட்டாய்; என்னை மயக்கி என் உள்ளத்தைக் கொண்ட நீ ஒரு கள்வி' என்றான். நின்னெஞ்சம் களமாக் கொண்டு யாம்ஆளல் எமக்கெவன் எளிதாகும்; புனத்துளான் என்னைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க்கிற்பதோ. "உன் மனம் எனக்கு அடிமையாவதால் எனக்கு என்ன பயன்? அது புனத்திடத்தானாகிய என்.அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுக்குமா? பசுத்திரள்களிடத்தானாகிய எந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு செல்லுமா? தினை அறிந்த தாளிடத்தே என் அன்னை மேயவிட்ட கன்றை மேய்த்துக் காத்து நிற்குமா?’’ என்று நகையாடுகின்றாள் அந்த ஆய நங்கை (கலி.108) “நின்முன் நின்று சொல்லாடுதல் தகாது என்பது எம் தமர் கட்டளை' என்று ஆற்றிடை சந்தித்த ஒர் ஆய நங்கை தெரி வித்ததும் மறுத்துக் கேட்கின்றான் ஒரு காதற் குறும்பன். "ஆம்: நின் உறவினர் கூறியது ஒக்கும், ஒக்கும். என்னுடன் உரையாட லாகாது என்று சொன்னார்களேயன்றி புல்லுதல் ஆகாது என்றனரோ? இஃது அன்பும் குறும்பும் கலந்த மறுமொழி என்பது தெளிவு (கலி-112). இன்னோர் ஆயமகன் ஓர்ஆயமகளை ஆற்றிடை