பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 அகத்திணைக் கொள்கைகள் முறையில் கற்புக்கடன் பூண்டு விட்டாள். இது பாலது ஆனை யால் நேரிட்டது' என்பது. இக்கருத்து தோழியின் கூற்றால் எங்ங்ணம் பெறப்படுகின்றது என்பதைக் காண்போம். இதன்கன் 'ஒலி வெள்ளருவி ஒங்கு மலைநாடன்' என்பதால் தலைவன் பெரும் புகழும் பெருந்திருவும் உடையான் என்பதும், அவன் ஏகார் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடித் தோன்றல் என்பதும் உணர்த்தப்பெறுகின்றன. ஒளி வெள்ளருவி என்றது மண் தேய்ந்த பெரும்புகழையும், ஒங்குமலைநாடன்' என்றது உயர் குடிப் பிறப்பையும் திருவாளன் என்பதையும் உணர்த்துகின்றன. 'யான் நோகு என்பதால் பாலது ஆணையால் நிகழ்ந்தது என்பது போதருகின்றது. இதில் தோழியின் கூற்று பிறிதொரு பொருளை உணர்த்தியதால் இறைச்சியாயிற்று. மேலும், இது அறத்தொடு நிலை வகையில் உண்மை செப்பல் வேட்கை உரைத்தல், ‘ஏத்தல்’ என்ற மூன்று வகைகளையும் மேற்கொண்டிருந்தல் நுண்ணிதின் அறிந்து மகிழத் தக்கது. (4) வினைமேற் சென்ற தலைவன் ஒருவன் மீண்டு வருகின் றான். வந்தவன் தான் விரைந்து மீள்வதற்குக் காரணமாயிருந்த தலைவியின் நற்குணங்களைப் பாராட்டிக் கூறுகின்றான். தலை வனின் கூற்றாக அமைந்த பாடல்: உள்ளுதற் கினிய மன்ற செல்வர் - யானை பிணித்த பொன்புனை கயிற்றின் ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே.” உள்ளுதல் - நினைத்தல்; பொன்புனை கயிறு - பொன் னிறத்தால் அழகு செய்யப்பெற்ற கயிறு, சுரம் - பாலை நிலம்; உள்ளம் மனம்; வாங்க கவர்ந்து கொள்ள) இந்தப் பாலைத்திணைப் பாடலில் வெளிப்படையர்க அறிவிக் கப்படும் பொருள்: "அரும் பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! யான் வெம்மை மிக்க பாலைப் பரப்பிடையே வருங்கால் பொன்னால் செய்யப்பெற்ற கயிறு போன்ற நின் பெண்மை நலங்கள் என்னை கவர்ந்திழுந்தலால் விரைந்து வர முடிந்தது' என்பது * தலைவனின் கூற்றில் அவன் உணர்த்தக் கருதும் பொருள்: செல்வர் அடங்காத யானையைத் தம் திரு மதுகையால் கட்டித் 12. டிெ - 356