பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அகத்தினைக் கொள்கைகள் ஊரலரை வெறுக்கும் ஐந்திணை காந்தம் இருவர். ஒருத்தி நற்றாய்; மற்றொருத்தி செவிலித் தாய். எவ்வகையானும் அம்பலையோ அலரையோ இவர்கள் விரும்புவதில்லை. தன் குடும்பத்தைப்பற்றிப் பேசுவதற்கு இவர்கள் யாவர்? தன் செல்வியின் நடத்தைபற்றி வாய் எடுத்தற்கு ஊரார்க்கு என்ன உரிமை உண்டு? என்றெல்லாம் தாய் மனம் கொதிக்கின்றது. கெளவை மேவலராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லவென் மகட்கு" (கெளவை-பழிச்சொல்; நிரையம்-நரகம்; புரைய-பொருந்தl என்ற அகப்பாட்டில் ஒரு தாயின் பெருமிதம் பொருந்திய மன நிலையைக் காண்கின்றோம். என்மகள்மேல் இடுதேளிட்டாற் போல் பழி பரப்பும் இவ்வூர்ப் பெண்டுகள் இவ்வுலகப் பெண்டுகள் இல்லை, அவர்கள் நரகப் பெண்டுகளே' என்று கூறுங்கால் அவளது ஆறாச் சினத்தை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அகத்திணை நாடகத்தில் அலர் துறை பற்றிய பாடல்களில் வெகுளித் தாயர்களின் பிரவேசத்தைக் காணலாம். தன் மகள் களவொழுக்கத்தைத் தாயே ஒருநாள் தெரிந்து கொள்வாள் என்று சும்மா இராமல் என்வீட்டுப் படியேறி வந்து என்னிடமே பல காலும் இன்னள் இனையள் நின்மகள், என்று குறை சொல்லும் இவ்வூர் மகளிர் நல்ல வாயும் குடும்பத் தொழிலும் உடையவர்கள் அல்லர்; தீவாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர் ' என்று பெற்ற மனம் பித்தாக வசை பொழியும் அக நானுாற்றுத் தாய் ஒருத்தியை நாம் ៩Tាមិញយ៉ា.* பெதும்பைப் பருவத்து மகளைப் புறத்தே போகவிடாமல் கோல் கொண்டு அலைத்து அல்லும் பகலும் கண்காணிக்கும் அன்புத் தாயர்களை அக இலக்கியத்தில் காண்கின்றோம். பாடல்களைக் கற்பார்க்கும் தலைவிக்கும் தோழிக்கும் தலை வனுக்கும் அன்னை கொடியவளாகவும் காதலுக்குப் பகையானவ ளாகவும் தோற்றம் அளித்தாலும், தன் மகளது இளமை வேகத் தால் தன் பழங்குடி ஒழுக்க வழுப்படுதல் கூடாது, ஊர்வாய்ப் படுதல் கூடாது என்ற விழிப்புணர்ச்சிதான் அன்னையின் கடு 59. அகம்-95 60, டிை-203,