பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 அகத்திணைக் கொள்கைகள் (மரம் கொல்-மரங்களை வெட்டிய துளர்ந்து-உமுது: குரல்-கதிர் இறடி-தினை, காக்கும்-காவல் செய்யும்; அசை இயல்-மெல்லிய சாயல்; கொடிச்சி-தலைவி; தழைதழிை ஆல்ட்- உதவிஅளித்து; செயலை-அசோகு; அயலது-அருகிலுள்ளது: அரலை-அரளி: அழுங்கல் spgg frஆரவாரத்தையுடைய ஊர்; ஏம்.உற்றன்று-மயக்கம் உற்றது) 'இவளுக்குத் தழை உடை உதவி அன்பு செய்தவன் ஒருவன் இருப்ப அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறி எடுப்பதனால் பயனில்லை' என்று இதில் தோழி அறத்தோடு நின்று உண்மையை வெளிப்படுத்துகின்றாள். அயலது - அயன் மையுடையது; இதனைச் சூட்டுவதனால் பயனில்லை என்ற குறிப்பும், அரலை மாலை கொய்வார் அதனருகே நின்ற செயலையின் நிலை கண்டு அது தழையின்றி நிற்பதன் காரணத்தை ஆய்ந்திலர் என்ற குறிப்பும் தோன்றுமாறு கூறும் தோழியின் நய வுரை மகிழ்ந்து போற்றுதற்குரியது. ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையில் 'தாய்குரைத்த பத்து’’’ என்ற தலைப்பில் தோழி செவிலித் தாய்க்கு அறத் தொடு நிலைவகையால் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளன. பல் வேறு உணர்ச்சி நிலைகள் பல்வேறு வகையால் கூறப் பெற்றுள்ள அப்பாடல்கள் பன்முறை பயின்று நுகர்தற்குரியவை. உடன்போக்கு இதிலும் தோழியின் திறம் பாராட்டும் வகையில் அமைந்திருக்கும். . . தலைவியொருத்தியின் காதல் வாழ்வில் இற்செறிப்பும் காப்பு மிகுதியும் நேரிடுகின்றன. தலைவி கோரிய காதலனுக்கு வரைவுடன் பட மறுக்கின்றனர் பெற்றோர்கள். தலைவியை வேறோர் இளைஞனுக்கு மணம் பேசவும் முனைகின்றனர். காதலர்கள் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகின்றது. இந்நிலையில் உடன்போக்கு ஒன்றே வழியெனத் துணிகின்றாள் தோழி. இதற்குத் தலைவனை உடன்படுவித்து அச்செய்தியைத் தலைவிக்குக் கூறி அவளையும் உடன்படுவிக்க முனைகின்றாள். 89. ஐங்குறு - 11ஆம் பத்து