பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 அகத்திணைக் கொள்கைகள் (அணித்து-அருகிலுள்ளது; சேய்த்தும்-தொலைவிலுள்ள தும்; கான் யாறு-காட்டாறு, குருகு-நாரை யாவதும்வேறுஒன்றும்; துன்னல்-நெருங்கல்; கூழைக்கு-கூந்தலுக்கு; எருமண்-களிமண், கொணர்கம்-கொண்டு வருதற்கு) 'ஊருக்கு அருகிலுள்ளது பொய்கை; பொய்கைக்கும் அருகி லுள்ளது கான்யாறு. தலைவி அந்த ஆற்றங்கரையிலுள்ள பொழி லுக்கு வருவாள்.' என்று தோழி மாற்றிடம் கூறுவதைக் காண்க. இந்த இடத்திற்குத் 'தாங்கள் வரல் எளிது’ என்பதைக் குறிப் பால் புலப்படுத்துகின்றாள். இந்த எளிதான இடத்தில் தனியிட மும் உண்டாங்கொல்லோ என்று ஐயம் நிகழாதபடி 'யாவதும் துன்றுதல் நீங்கியது அப்பொழில்' என்கின்றாள். தாம் வருதல் தம் கூழைக்கு எருமண் கொணர்தற்கே யாதலின், தாம் கான் யாற்றம் கரையில் நிற்றலன்றிப் பொழிவில் புகவேண்டியஅவசியம் இல்லைஎன்பதையும் அறிவித்துப் பொழில்,குறியிடம் என்பதைப் பெறவைக்கின்றாள், இதில், தோழியின் முடியும் இடனுமார் உண்டே." என்னும் தொல்காப்பிய விதிபற்றி தோழி குறியிடம் கூறினாள் என்பது அறிதற்பாலது. இந்த இரண்டு பாடல்களிலும் தோழியின் குறியிடம் அமைக்கும் அருமைப்பாடு பாராட்டுதற்குரியது. வரைவு கடாதல்: களவொழுக்கத்தில் தலைவியைத் தலைவன் அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பினைத் தருவதில்லை உலகியலறிந்த தோழி. மதிநுட்பம் மிக்க தோழிவரைவுகடாதலில் பல முறைகளைக் கையாளுவதை அகப்பாடல்களில் கண்டு மகிழ லாம். ஈண்டு இரண்டினைக் காட்டுவோம். முதலாவது : தினை முற்றியது கூறி வரைவு கடாதல். தலை வனுக்கும் தலைவிக்கும் சந்திப்பதற்கு வாய்ப்பாக இருந்தது தினைப் புனம். இதில் கிளிகள் முதலிய புட்கள் பகலிற் படிந்து தினையினைக் கவரா வண்ணம் தலைவியைக் காவற்கு அனுப்பி யிருந்தனர். அதனால் அடிக்கடி அங்கு இருவரது கூட்டமும் நிகழ்ந்தது. தலைவனிடம் இந்த வாய்ப்பு இனி இராது என்கின் றாள் தோழி 84. (இளம்) களவியில்-31.