பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-31 திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற இவை ஐந்திணையுள் அடங்கியவை: தனித்தனித் திணையாகக் கருதப் பெற்றவை. ஆகவே, சங்கப் புலவர்கள் ஐந்திணைமேலும் பாடாமல் தலைக்கு ஒரு திணையாகப் பாடினர். ஐங்குறு நூற்றினைப் பாடியவர்களை, மருதம்ஒ ரம்போகி; நெய்தல் அம் மூவன்; கருதும் குறிஞ்சி கபிலன்;-கருதிய பாலைஓதல் ஆந்தை; பனிமுல்லை பேயனே; நூலையோ தைங்குறு நூறு." என்ற வெண்பாவால் அறியலாம்: கலித்தொகைப் பாடல்களையும் ஐந்து சான்றோர்கள் பாடினர் என்பதை, பெருங்கருங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி; மருதன்இள நாகன் மருதம்: அருஞ்சோழன் நல்லுத் திரன்முல்லை; நல்லந் துவன்நெய்தல்; கல்விவலார் கண்ட கலி.” என்ற வெண்பா புலப்படுத்துகின்றது. எட்டுத் தொகையில் ஐங்குறு நூறும், கலித்தொகையுமே பாடினோர், எண்ணிக்கை குறைந்த நூல்களாகும். இவர்களுள் பெருங் கடுங்கோ பாலை பாடிய என்ற அடையையும் பெற்றுள்ளார். இங்ஙனமே, இவர் தம்பி இளங்கடுங்கோ மருதம் பாடிய என்ற அடையைப் பெற் றுள்ளார். அம் மூவனார் (நெய்தல்), ஒதலாந்தையார் (பாலை), இளநாகனார் (மருதம்), ஒரம்போகியார் (மருதம்), கபிலர் குறிஞ்சி), நல்லுத்திரன் (முல்லை), நல்லந்துவனார் (நெய்தல்) 1. தனிப்பாடல் 2. தனிப் பாடல்