பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 329 வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் இவள்எனச் கூறுமின் வாழியோ ஆறுசென் மாக்கள் நற்றோள். நயந்து பாராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே" (இறந்தனள்-கடந்தனள், ஆறு செல் மாக்கள்-வழிப்போக் கர்கள்; கெடுத்து-இழந்து.) என்ற பாடற் பகுதியால் இதனை அறியலாம். இத்தகைய நிகழ்ச்சிகளைச் சித்திரித்துக் காட்டும் பல பாடல்களை இந் நூலில் கண்டு மகிழலாம்.'" தலைவன் மாட்டுத் தான் கொண்டுள்ள பேரன்பால் தலைவி உடன் போக்கில் பல்வேறு இடர்ப்பாடுகளையும் தாங்கும் நெஞ் சுறுதியுடையவளாக இருப்பதனைக் காண்கின்றோம். உடன் போய் மீண்ட தலைமகளைத் தோழி நின் தலைவன் ஊர் நன்னீர் இல்லா ஊர் என்பரே, அந்நீரை எவ்வாறு பருகினை? என்று வினவ, அதற்கு அவள் கூறும் விடையிலிருந்து இதனை அறிகின்றோம். அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய அவர்காட்டு உவலை கூவற் கீழ மானுண் டெஞ்சிய கவிழி நீரே' (படப்பை-வீட்டுத் தோட்டம்; மயங்குதல்-கலத்தல்; உவலை-தழை (சருகு), கூவல்-கிணறு, கலிழி-கலங்கல்) தன் தாதையில்லத்துக்கொண்டதேன் மயங்கு பாலினும், தன் கணவன் நாட்டுக் கலிழிநீரே இனிது எனக் கருதின தலைவியின் காதல் மாண்பும் அறமாண்பும் இதில் ஒருங்கே தோன்றுவதைக் கண்டு மகிழலாம். பொரியுடன் கலந்த பாலையும் மிகை எனக் கருதும் குறுந்தொகைத் தலைவி, தன் தலைவனுடன் செல்லுங் கால் நீர்வளமற்ற சுனையினருகில் மிக்க வெப்பத்தையுடைய கலங்கல் நீரைத் தவ்வென்ற ஒசையுடன் குடிக்கும் காட்சியையும் கண்டு மகிழ்கின்றோம்." 58. ஐங்குறு-385 59. டிெ-38, 39, 40 ஆம் பத்துகள் 60. இடி-203 - - - 61. குறுந். 356