பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 அகத்திணைக் கொள்கைகள் (உடுத்தும்-உடையாக உடுத்தும்; தொடுத்தும் - மாலை யாகத் தொடுத்து அணிந்தும்; பூண்டும்-குழை முதலிய அணிகலன்களாக அணிந்தும்; செரீஇயும்-கூந்தலில் செருஇ யும்; ஆயம்-பரத்தையர் கூட்டம்; துவன்றி-நெருங்கி; ஆன்-பசு வல்சி-உணவு, பெருநலம்-மிக்க அழகு; குறு மகள்-இளைய தலைவி: இனி-இப்பொழுது) 3. இதில், “நீ நீர் விழாவை அயர்ந்து வருகின்றாய். தலைவியை நீ மணப்பதற்கு முன்னர் இவ்விழவுக்குரியவளம்" நின்பால் இல்லை. இவள் நின் துணைவியாக வந்த பிறகே நீ செல்வம் பெற்றாய் என்று ஊரார் கூறினர் இப்படியிருப்பவும் நீ இவளைப்புறக்கணித் தாய்' என்று அறிவர் தலைவனை இடித்துக் கூறியதைக் கண்டு மகிழ்க தலைவியை மணந்த பிறகே தலைவனுக்குச் செல்வம் உண்டாயிற்று என்பதை 'விழவு முதலாட்டி' (குறுந் 10) என்று தலைவியை ஒம்போகியார் சிறப்பித்தலாலும் அறியலாம். இவர் தலைவியையும் இடித்துரைப்பர் என்பதை அகப்பாட் டொன்றால்' அறியலாம். பரத்தையிற் பிரிந்து வரும் தலை மகனுடன் தலைவி ஊடல் கொள்ளுகின்றாள். அவள் அவனை வீட்டிற்குள் அநுமதிக்கவும் மறுக்கின்றாள். இந்நிலையில் அறிவர் அவளுக்கு அறிவு கொளுத்தித் தெருட்டுகின்றனர். “கற்புடைய பெண்ணாகிய நீ அவனுடன் ஊடுதல் பொருந்துமோ? தலைவனை விட்டுப் பிரிந்து வாழ்வோரிடமிருந்து திருமகள் நீங்குவாள். தேன் மொழிப் புதல்வர் பாலின்றிச் சுருங்கிய முலையைச் சுவைக்க, தனி யாகச் சமைத்து உண்டு வாழும் வாழ்க்கை எளிமையாக முடியும் என்பதை நீ நன்கு அறிவாய். அப்படியிருந்தும் நீ ஊடுதல் அறியாமையே என்று அறிவுறுத்துவர். A. தலைவியொருத்திக்கு நீக்குவித்தாலும் நீங்காத ஊடல்உணர்ப்புவயின் வாராஊடல்-உண்டாகின்றது. இதனைக் கண்ட தலைவனுக்கு அவளை நீத்துச் செல்லும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் அறிவர் தலையீடு ஏற்படுகின்றது. 16. "ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை' என்ற கருத்து ஒரா யாத்த ஒருதுரண் முன்றில், ஏதில் வறுமனை என்று நெடுந் தொகையிலும் (அகம்-369) வந்துள்ளது. 17. அகம்-316 (இளம்பூரணர் காட்டியது.)