பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கிளை - 279 துள் நாணி ஒடுங்கிய காதலியின் முக மறைவைத் திறந்து இன்புற்றேன்’ என்று மற்றொரு தலைவன் தன் மண நாளை நினைத்தலாலும், உறுதிப்படுகின்றது. இவற்றால் மணமான அன்றிரவே மெய்ம் முயக்கம் உண்டு என்பதும். காமஞ்சான்ற குமரியைத் தான் மணம் செய்வர் என்பதும் தெளிவாகின்றன. சங்க இலக்கியம் முழுவதும் துருவி ஆராயினும், பிற்கால இலக்கி யத்தை ஊன்றி நோக்கினும், இச்சிறு மணம் பற்றிய செய்தி குறிப் பாகக் கூட யாண்டும் காணப்பெறவில்லை. இதுகாறும் கூறியவற்றால் நாம் அறிந்து கொள்வது கைக் கிளை ஒரு மனநிலையே என்பது. காமஞ்சாலாத இளையவளைபக்குவம் எய்தாத பெண்ணை-ஒர் இளைஞன் காதலிக்கும் அகத் திணைக்கைக்கிளைக்குத்தமிழ்ச்சமுதாயவழக்குஇல்லை இத்தகைய திணைக் காதலை நிலைக் களனாகக் கொண்டு எந்த நிகழ்ச்சியும் நடந்த தில்லை, ஆயினும் இக் காமத் தன்மை தமிழ் மாந்தர் தம்உள்ளத்து நிகழும் ஒன்றேயாகும். ஒத்த தோற்றத்தால் பருவம் மயங்கிய ஆடவன் கொள்ளும் காமத்தின் மனநிலையைச் சுட்டிக் காட்டுவதே அகத்திணைக் கைக்கிளையாகும். இம் மனநிலை கனா மயக்கம் போன்று நீடித்து நில்லாதது. இஃது இளம் பெண்களைக் காணுங்கால் குமரர்கட்கு இயலபாகத் தோன்றும் உள்ளத்தளவில் உள்ள ஒர் உணர்ச்சியாகும். இது காமம் தந்த பெண்ணுக்கும் புறத்தார் யாருக்கும் புலனாகாதது. ஆயினும், ஒர இளைய ஆடவன் அகத்தில் பிறந்து நின்று மனறவது. இந்நுட்ப மன நிலையைக் கண்ட தமிழ் மூதறிஞர்கள் இந் நிலை குற்றமுடைய தன்று எனவும், ஒருவித இயற்கையின் விளைவு எனவும் தெளிந்து இலக்கியத்திலும் வைத்துப் போற்றினர். மெய்ப் பருவத் தகுதி. யின்றி உள்ளமாகிய நிலத்துக் காம உணர்வு. தோன்றாது. உள்ளப் புணர்வுக்கு உடற் பருவத்தின் இன்றியமையாமையைக் காட்டுவதே கைக்கிளையின் குறிக்கோளாகும். - அகத்திணையின் பண்பு உள்ளப் புணர்ச்சி என்பதை நாம் அறிவோம். ஆயினும், உள்ளப் புணர்ச்சிக்கு இடந்தராத கைக் கிளையை அகத்திணையில் சேர்த்துள்ளனர். உள்ளப் புணர்ச்சி யாவது நெஞ்சத் தூய்மை, அன்புக் கூட்டுறவு ஆகும். கைக் கிளையில் யாருடைய தூய்மையும் கெடவில்லை. ஒருவன் தாய உள்ளத்துடன் காதலை நாடினான்; நாடப்பெற்ற பெண்ணோ 21. டிெ-86.