பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468 அகத்திணைக் கொள்கைகள்


பொருட்டே தலைவன் பிரிந்தான்' என்று தோழி கூறுவதாக அமைந்தது இது.

      நற்றிணையில்: சில உள்ளுறை உவமங்களைக் கண்டு மகிழ் வோம். .
           (1) பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
               புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி                             கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்                       பல்கால் அலவன் கொண்கோட் கூர்ந்து 
               கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 
               இரைதேர் நாரை எய்தி விடுக்கும் 
               துறைகெழு மாந்தை"
               
              (திரை-அலை; பொருத-அலை மோதிய                             அடைகரை-அடுத்த கடற்கரை, புன்கால்-புல்லிய                   காம்பு, பொதி-களி பொருந்திய கிளை-இனம்:                     செத்து-கருதி, தும்பி-வண்டு கள்; அலவன்-                       நண்டு; கோள்கோட்பாடு; இமிரும்-ஒலிக்கும்;                     பூசல்-போரிடும் ஒலி, தேர்-தேடுகின்ற)
              
          இந்த நெய்தல் திணைப் பாடற்பகுதியில் வெளிப்படையாக உள்ள கருத்து இது: கடற்கரை மணலில் நாவல்கனி யொன்று உதிர்ந்து கிடக்கின்றது. அதனைத் தம் இனம் என்று கருதி வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்றன. அதனைக் கனி என்றே தேர்ந்து நண்டொன்று அதனைப் பற்றி இழுத்துச்செல்லுகின்றது. வண்டுகள் அச்செயலை விலக்குவதற்குப் பெரும் பூசலிட்டு ஒலிக்கின்றன. அப்பொழுது இரைதேடி வரும் நாரையொன்று அவ்விடத்திற்கு ஏகுகின்றது. நாரைக்கு வெருவிய நண்டு பற்றிய கனியை விட்டொழித்து வளையினுள் புகுந்து கொள்ளுகின்றது.
          
     இங்ஙனம் வெளிப்படையாகவுள்ள கருத்தில் அடிப்படையாக அமைந்த கருத்து இது. இதில் நாவற்கனி தலைவியையும், தும்பி தோழியையும், அலவன் தலைவிமேல் தவறிழைக்கும் தலைவனை யும், இரைதேர் நாரை தலைவனையும் குறிக்கும் உள்ளுறை யாக அமைந்துள்ளது. கனியைத் தும்பி மொய்த்தல் தலைவியைத் தோழி சார்ந்திருப்பதை உணர்த்துகின்றது. இந்நிலையிலும் கணியை அலவன் பற்றுவது தோழியைச் சார்ந்திருந்தும் தலைவி
------------------------------------------------------------------     

23. நற்-35