பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 363 றான். இவன் பாங்கற் கூட்டத்தில் செயற்படுவதனால் இதனை அறியலாம். தலைவியை நேர் நின்று காணலும் அவள் முன்னின்று மொழிதலுமின்றி ஒரு வழிப் போக்கன்போல் தலைவியிருக்கும் இடம் சென்று திரும்புவதைக் காண்கின்றோம். தலைவனின் தோழர்கள் யாவர் என்பதைத் தலைவியும் அறியாளாதலின் இவன் நடமாட்டத்தைப்பற்றி ஐயுற்று யாதொன்றையும் கருதாள். 'தோழியிற் கூட்டம்போலப் பாங்கன் உரையாடி இடை நின்று கூட்டாமையின்' என்று நச்சினார்க்கினியரும், 'தன் வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யான்' எனப் பேராசிரியரும் பாங்கனின் பங்கினை வரையறை செய்திருத்தல் காண்க. - இரண்டாவது: பாங்கன் அறிவுறுத்துபவனாகவும் காணப் பெறுகின்றான். இவன் ஒரு பற்றுக்கோடாக நின்று காமச்சுரத் தால் தாக்கப்பெற்று நிற்கும் தலைவனின் மனவேகத்தைத் தணி விக்கும் கருவியாக அமைகின்றான் இன்ப வெள்ளத்தாலோ அன்றித் துன்பப் புயலாலோ நம் நெஞ்சு அலைவுறுங்கால் அவற்றைப் பிறரிடம் பேசினால் நமக்கு ஆறுதல் உண்டாவதை நாம் நன்கு அறிவோம். இஃது ஒர் உளவியல் உண்மை. இவ் வாறு பாங்கன் தலைவனது காமப் புதுமையைக் காது கொடுத்துக் கேட்கும் செவியனாய் அமைவதை அகப்பாடல்களில் காண்கின் றோம். தலைவனின் புதிய உணர்ச்சியையும் புதிய உறவையும் அவன் பேச்சால் அறிந்து கொள்ளும் பாங்கன் அவன் குலமும் குணமும் அறிவும் சுட்டி அவனது ஒழுக்கத்தினின்றும் மாற்ற முயல்கின் றான். பாங்கன் கழறியுரைத்தலை குன்றம் உருண்டால் குன்றி வழியடையாகாதவாறு ப்ோலவும், யானை தொடுவுண்ணின்' மூடுகலம் இல்லது போலவும், எம் பெருமான்! நின் உள்ளம், அறிவு நிறை ஒர்ப்புக் கடைப்பிடியின் வரைத்தன்றிக் கைம்மிக்கு ஒடுமே யெனின் நின்னைத் தெருட்டற்பால நீர்மையார் உளரோ?..... அப்பெற்றியாய நீ, இன்னதோர் இடத்து இன்னதோர் உருவு கண்டு என் உணர்வு அழியப் போந்தேன்' என்றல் தக்கின்று’’’ 72. களவியல்-11 (நச்.) 73. செய்யு-186 (பேரா.). 74. திருடித் தின்றால், 75. இறை. கள. 3 இன் உரை.