பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்புபற்றிய விளக்கம் 199


    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் 
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்"
       [தாமம்-மாலை; நிரை-வரிசை மதுசூதன்-கண்ணன்] 

என்ற பாடலால் அறியப்படும்.

    காதலர் வாழ்வில் கரணம் ஏன் வந்தது என்பதற்கும் தொல்காப்பியம் காரணத்துடன் விதி செய்துள்ளது.
      பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
      ஐயர் யாத்தனர் கரணம் என்ப" 
  [பொய்-செய்த ஒன்றினைச் செய்திலேன் என்றல்; வழுதவறு: அஃதாவது, 
  ஒழுக்கத்து இழுக்குதல்; ஐயர்-குலப் பெரியோர்] 

என்று அவர் கண்ட நூற்பாவுக்கு வேறுபட்ட உரைகளும் கருத் துரைகளும் பல்கிப் பெருகி மூல நூலாசிரியரின் கருத்திற்கு இரும்புத் திரை இட்டு விட்டன. காதலித்துப் புணர்ந்தவன் காதலித்தவளுக்கும் தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனக் கூறும் வஞ்சனையைத் தடுப்பதற்காகவே கரணம் அமைந்தது என்பதுவே அவற்றின் திரண்ட கருத்தாகும். களவு நெறியில் ஒழுகியவன் தனக்கும் அவளுக்கும் தொடர்பில்லை என்று கூறி விட்டால் கற்பும் இல்லை: கரணமும் இல்லை. ஆகவே, களவு முறையில் தோன்றும் பொய்யையும் வழுவையும் கரணம் தடுக்கும் என்றும், தடுப்பதற்காகவே கரணத்தை அமைத்தனர் என்றும் கூறுவார் கருத்து பொருளற்றது. மணமாகிய பின்னரும் கைப் பிடித்த காதலியைக் கைவிட்டால் கரணம் அதனைத் தடுத்து விடும் என்று நினைப்பதும் பொருளற்றது. இந்த இருவகைப் பட்ட நிகழ்ச்சிகளும் சமுதாயத்தில் காணக்கூடிய நிகழ்ச்சிகளே. அகநானூறும் இத்தகைய நிகழ்ச்சியொன்றினைக் குறிக்கின்றது. 'கள்ளூர்' என்ற ஊரில் தீவினையாளன் ஒருவன் ஒர் இளமகளின் நலத்தை நுகர்ந்து பின் அவளைக் கைவிடுத்துத் தனக்கும் அவளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனச் சூளும் செய் தான். ஊர்ச் சான்றோர்கள் தக்கபடி உசாவி அவனுக்கு அவளுடன் உறவுண்டு என்பதைத் தெளிந்து, காதலறம் பொய்த்த அக்கயவனை மரத்திற் பிணித்துத் தலையில் நீற்றினைக் கொட்டி _________________________________________________________________________5. நாச், திரு. 6:6 6. கற்பியல்-4