பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 573 எழுகின்றது. இந்த ஆழ்வார் அருளியுள்ள சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு பிரபந்தங்களிலும் ஆழ்வார் நாயகி மடலேறத் துணிவதாகக் கூறப்பெறுகின்றது. இதனைத் தமிழ் மரபினை மீறிய ஒரு புரட்சி என்று கருதலாமா என்பது வினா. இரண்டு மடல்களிலும் ஆழ்வார் நாயகி மடலூர்வன் மடலூர்வன்' என்று சொல்லி அச்சமுறுத்தினாரேயன்றி அச் செயலை முற்றமுடிய நடத்தினதாகக் கூறவில்லை. சிறிய திருமடலில், ஒரானைக் கொம்பொசித்து ஒர்ஆனைக் கோள்விடுத்த சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணருஞ்சீர் பேரா யிரமும் பிதற்றி பெருந்தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன்.நான் வார்.ஆர்பூம் பெண்ணை மடல்.’ (முதல் ஆனை-குவலயா பீடம்; இரண்டாவது ஆனைகசேந்திரன்; கோள்விடுத்த-இடரைப் போக்கின; இகழி னும் பழித்தாலும், ஊராது ஒழியேன்-ஊர்ந்தே தீருவேன்) என்று கூறுவதாலும், பெரிய திருமடலிலும், உலகறிய ஊர்வன்நான் முன்னி முளைத்தெழுந்து ஓங்கி ஒளிபரந்த மன்னியபூம் பெண்ணை மடல்." என்று கூறுவதாலும் இதனை அறியலாம். நம்மாழ்வாரும் பராங்குச நாயகி நிலையில் இம்மடலேறுதலைச் குறிப்பிடும் பொழுது, - தோழி! உலகு தோரலர் தூற்றி கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே." (கோணை-மினுக்கு: குதிரி-அடங்காத பெண்) என்றும் , 3. சிறிய திருமடல் இறுதிப் பகுதி. 4. பெரிய திருமடல்-இறுதிப் பகுதி. 5. திருவாய்-5.3: 9.