பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 அகத்திணைக் கொள்கைகள் செய்த அல்லல் பல்குவ வையெயிற்று ஐதகல் அல்குல் மகளிர் இவன் பொய்பொதி கொடுஞ்சொல் ஒம்புமின் எனவே.”* (அகல் நெடும் தெரு-அகன்ற நீண்ட தெரு, சாறு-விழவு; முதுவாய்-அறிவு வாய்ந்த, நுவன்றிசின்-கூறிப் போவாய், அமன்ற-நெருங்கிய, பழனம்-வயல், பொய்கை-குளம்; கவர்-விரும்பும்; அல்லல்-துன்பம்; பல்குவ-பலவாகி வளர் வனவாயின; வைஎயிறு-கூரிய பற்கள்: ஐது அகல் அல்குல்மெல்லியதாய் அகன்ற அல்குல்; பொய்பொதி-பொய் நிரம்பிய ஒம்புமின்-பாதுகாத்துக் கொள்வீர்) 'அறிவு வாய்ந்த குயவனே, நீ திருவிழாச் செய்தியினை அறிவிக்கும்பொழுது ஆங்காங்குள்ள மகளிரிடம் மங்கைமீர், இசையால் மயக்க வல்ல பாணன் செய்த துன்பங்கள் பலவாகி வளர்வன வாயின. ஆகவே, பொய் பொதிந்த அவன் சொல் வினின்றும் நூம்மைப் பாதுகாத்துங் கொள்ளுவீர்களாக' என்றும் சேர்த்துச் சொல்க' என்று தோழியின் கூற்றில் பாணன் செய்த கொடுமை புலப்படுவதைக் காண்க. தலைவனைப் பரத்தையரிடம் கூட்டுவிக்க நினைக்கும் பாணன் தன் வீட்டருகில் யாழ் வாசித்துவிட்டு அவள் இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபொழுது ஈன்று அணிமையுடைய பசு ஒன்று அவன்மீது பாய, அவன் அதற்கு அஞ்சித் தான் வைத்திருந்த யாழினைத் தெருவிலே போட்டுவிட்டு ஓடி வந்து தம் மனையில் வந்து புகுந்ததையும், தான் அவனுக்கு மறுமாற்றம் அளித்ததையும் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள். நகையா கின்றே தோழி... தண்டுறை ஊரன் திண்டார் அகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்(டு) எம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவமை மறையினென் எதிர்சென்(று) 25. நற்-200