பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1546 அகத்திணைக் கொள்கைகள் காணலாம். புணர்தலுக்கு மலைப்பாங்கும். ஊடலுக்கு வய லிடமும், இருத்தலுக்குக் காட்டுச் சார்பும் அமைத்தல் வேண்டும் என்ற புலநெறி வழக்கத்தைத் தழுவாது இயல்பு நெறிப்படி பாடிய வித்தகர் இவர். இவர் பாடல்கட்கு நெய்தல் நில மக்களே தலைமக்கள். ஆதலின் எல்லா உரிப்பொருளுக்கும் களமாக ஒரு திணையையே கொண்டனர். பரத்தையரைக்கூட நெய்தலங் கண்ணி (ஐங். 135) என்று சுட்டியுரைப்பர். தலைவியொருத்தி உடன்போக்கில் செல்கின்றாள்; மெல்லக் கடத்திச் செல்லும் தலைவன் இடைச்சுரத்தில் கூறுகின்றான்: வருமழை காத்த வானிற விசும்பின் நுண்துளி மாறிய உலவை அங்காட்டு) ஆல நீழல் அசைவு நீக்கி அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ, வருந்தாது ஏகுமதி: வால்இழைக் குறுமகள்: இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை விமலர் உதிர்ந்த தேன்நாறு புலவின் கானல் ஆர்மணல் மரீஇக் கல்லுறச் சிவந்தநின் மெல்லடி உயற்கே." (வான்நிறம்-வெளியநிறம், கரிய நிறமுடைய விசும்புமாம்; உலவை-காற்று: அசைவு நீக்கி-இளைப்பாறி, அசைஇ, தங்கி; ஏகுமதி-ஏகுவாயாக; வால் இழை-து.ாய அணிகள்: பேர்அலர்-பெரிய பழிச்சொல்; கானல்-கடற்கரைச்சோலை; மரீஇ-நடந்து உயற்கு-வருந்தாதிருக்கும் பொருட்டு) இப்பாடலை வருமழை........ அங்காட்டு' என்று பாலைத் திணையில் பாடத் தொடங்கிக் கிளவித் தலைவியை வால் இழைக் குறுமகள்...உயற்கே என்பதனால் நெய்தல் நிலத்தினளாக அமைத்துப் பாடியிருத்தலைக் கண்டு மகிழ்க. நெய்தல் திணையில் பாலை உரிப்பொருளாகிய உடன்போக்குப் பிரிவை அமைத்துப் பாடியிருக்கும் அருமைப்பாட்டை நுகர்ந்து மகிழ்க. - அம்மூவனார் தம் பாடல்களில் படைத்துக் காட்டும் தலைவியர் மன உறுதியையும் உணர்ந்த அடக்கத்தையும் அணிகலன்களாகக் கொண்டவர்கள். தீமைக்குப் பணியார்; தம் பண்பிலும் மாறார். தலைவி ஒருத்தியின் பெற்றோர் வேறொரு 50. நற். 76.