பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 அகத்திணைக் கொள்கைகள் ببعد என்று வறுமையிலும் காமச் செவ்வி பாடுவதைக் காண்மின், இந்நங்கையின் உள்ளத்தை நம்பி மதித்து ஒழுக வேண்டும். தம்பியின் இளமை நீடித்தாலும் நங்கையின் இளமைக்குள்தான் தான் இன்பம் துய்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவன் சிந்தித்து ஒழுகுவது அறிவுடைமையாகும். செலவழுங்கல்: என்ற அகத்துறை இதற்கு ஒருநற்சான்று. நம்பியின் பொருளிட்டும் செயலுக்கு நங்கையும் இசைவு தரல் வேண்டும். நங்கையர்தம் உள்ளுறும்யை காமவேட்கை வெளிப்படக் கிளவார். தொல்காப்பி யரும், காமத் திணையிற் கண்நின்று வரூஉம் நானும் மடனும் பெண்மைய வாதலிற் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான.* என்று இதனைக் குறிப்பிடுவர். பெண் நாணத்தால் மறைத்துக் கொண்டிருக்கும் காமக் குறிப்பை ஆடவன் நுனித்து உணர்ந்து செயற்படல் அவன் கடமையாகும். மனைவியின் காம்ப் பதத்தைப் புரிந்து கொள்பவனே சிறந்த கணவனாவான்; இல்லறத்தை நல்லறமாக்கியவனுமாவான். இத்தகைய ஐங்குறு நூற்றுத் தலைவன் ஒருவன் செயலைக் காண்போம். பலருடன் பொருள்வயிற் பிரிந்த இவனுக்குத் தான் எண்ணிச் சென்ற அளவுடைப் பொருள் கிட்டவில்லை. தன் இல்லக் கிழத்தியின் நிலையை எண்ணியவனாய் வீடு திரும்பிவிடுகின்றான். திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி அருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச் சொல்லாது பெயர்தந் தோனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரும் நெறிவிலங் கதர கானத் தானே.” (அரிவை-பெண்; உள்ளி-எண்ணி; பொருள பன. பொருளின் மீதுள்ள ஆசை, பெருந்திரு உறுக-மருங்கறக் கெட்டொழிக; பெயர்தந்தேன்-திரும்பி வந்தேன்; பொறிபுள்ளி; விலங்கு -விலகிவிடுதற்குக் காரணமான அதர-கவர் வழிகளையுடைய) - 21. களவியல்.10 22. ஐங்-355