பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் ساتلة மரபுகள் 113 (கவளத்த - கவளத்தையுடைய, கரத்த - கையவாகிய துவள-வாட: சுரும்பு-வண்டு.) என்று திருக்சிற்றம்பலக் கோவையார் குறிப்பிடும் இவ்வுதவி முனைக் குறிஞ்சிப் பாட்டும் மிக அழகாகக் குறிப்பிடும். இங்ஙனம் மணிவாசகப் பெருமான் கூறிய இருபத்தாறு துறை களுக்கும் இறையனார் களவியல் எட்டுத் துறைகளே கூறி மற்ற வற்றைப் புறநடையில் அடக்குகின்றது. அவற்றை, குறையுறுங் கிழவனை உணர்ந்த தோழி சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும் என்னை மறைத்தல் எவனாகியரென முன்னுறு புணர்ச்சி முறைமுறை செப்பலும் மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ நீயே சென்று கூறென விடுத்தலும் அறியாள் போறலும் குறியாள் கூறலும் - படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும் அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை முன்னுறு புணர்ச்சிக்கு உரிய என்ப.”* இவற்றுள் மணிவாசகர் கூறா புதுத்துறைகளும் உள்ளன. அவை: முன்னுறு புணர்ச்சி முறை முறை செப்பல்”, "மாயப்புணர்ச்சி அவனொடு நகாஅ’, குறியாள் கூறல்’, ‘குறிப்பு வேறு கொளல், என்பனவாகும். படைத்து மொழி கிளவி என்னும் துறை இறையனார் களவியலுரையில் ஒருவிதமாகவும், திருக்கோவை யாரில் பிறிதொரு விதமாகவும் விளங்கக் கூறப்பெற்றிருத் தலையும் காணலாம். - பொருளிலக்கணத்தில் துறைகள் என்று கூறப்படுவன வெல்லாம் அவ்விலக்கணத்தோடு தொடர்பு பட்டாரின் நினைவுச் சொற்செயல் வேறுபாடுகளேயன்றிப் பிறிதொன்றில்லை. அவ் விலக்கணத்தைத் துறையுறுப்புக் கூறி விளக்க வந்த ஆசிரியர்கள் யாவரும் தத்தம் காலத்தில் எந்தச் செயல் எந்தத் துறையென்று எந்தச் சொல்லால் வழங்கி வந்ததோ அதனை அதுவாக வைத்தும், அல்லாததற்குத் தமது நூற்போக்குக் கேம்ப காமே ஒரு பெயர் படைத்து அமைத்தும் எழுதிச் செல்வர். எனினும், இம்மாறுபாட்டுக் காட்சியால் அவ்விலக்கணத்தின் முதன்மைப் 73. இறை. கள. 12 அ-ே