பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 அகத்திணைக் கொள்கைகள் இங்ங்ணம் பல்லாற்றானும் தன் நிலையையும் தன் காதல் நில யையும் கூறி வரும் தலைவன் மகிழுமாறு பாகன் கூறியதாக நற்றிணையில் ஒருபாடல்" உள்ளது. அதினுள்ள காட்சியைத் காண்போம். பாகன் கூறுகின்றான்: 'தலைவ, நின் கண்ணி வாழ்க! வினை முடிந்து நேற்றுதான் அரசன் விடை தந்தான் என்று கருதற்க. கலைமானோடு பிணைமான் கூடி விளையாடும் இம்முல்லைதான் நின் தலைவியின் இருப்பிடம். மான்களின் விளை யாட்டினைக் காணும் அவளும் அத்தகைய மகிழ்ச்சியைப் பெற விரும்புவது இயல்பேயன்றோ? அவள் கவலாமலும் நீ வருத்த முறாமலும் விரைந்து தேரினைக் கடவுவேன். நம் குதிரைகள் காற்றினும் கருகி ஓடும் தன்மையன. என் கைவன்மையால் கான்யாற்று மணற்கரை பின்னே செல்லுமாறு தேர் செல்லா நிற்கும். நீவிர் இருவீரும் விரைவில் கலந்து மகிழ்வீர்” என்பதாக நாற்கவிராச நம்பி பாகற்குரிய செயல்களாகச் சிலவற்றைத் தொகுத்து கூறுவர். சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும் வாயில்நேர் வித்தலும் வயங்குதுனி தீர்த்ததும் வினைமுடித் ததன்பின் வியன்பதி சேய்த்தென இனைவோற் றேற்றலும் பாகற் இயல்பே.”* இந்த நூற்பாவில் குறிப்பிட்டுள்ள முதல் மூன்று கிளவிகட்கும் இலக்கியம் காண்டல் அரிது. 64. நற் - 121 65. நம்பி அகப் 102