பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் 447 இயற்பட மொழிதலும் நிகழ்கின்றன; இவையே Usri-ji, பொருள். - பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக் கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைகளகா ஆடுகழை நெல்லை அரையுரலுட் பெய்திடுவோம் பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று." (வயக்களிறு-வலியுடைய யானை, கோடு.கொம்பு; சேம்புஒருவகைச் செடி ஆடுகழை-மூங்கில்; அரை உரல்பாறையாகிய உரல்.) - என்று பாடல் * தொடங்குகின்றது. உரையாடலாகப் பாடல் அமைகின்றது. - தலைவி : என்ன வியப்பு: சூள் பொய்த்த நம் தலைவனின் வெற்பிலும் அருவி நிறைய நீர் உள்ளதே! தோழி : குள் பொய்த்தவனோ? அவன் சூளில் பொய் தோன்று மாயின் அது திங்களில் தீத்தோன்றியது போலாம். தலைவி : என்னிடம் கூறியபடி வாராதவன் மலையில் இள மழை ஆடுகின்றதே, என்ன வியப்பு! தோழி : வாரா திருப்பனோ? அவன் அருளிடத்தே கொடியது தோன்றும் என்பது குளத்து நீரில் உன் ள குவனை வெந்தது போலாம். தலைவி : என் மேனியை அணையாது துறந்தவனது மாலை நீலமணி போலத் தோன்றுகின்றதே, என்ன வியப்பு! தோழி : தலைவன் நம்மைத் துறப்பவன் அல்லன். அவன் உறவில் கொடியவை தோன்றல் என்பது ஞாயிற்றுள் இருள் தோன்றியது போலாம். - - இவர்கள் இங்ஙனம் பாடிக் கொண்டே நெற்குற்றுதலைச் சிறைப்புறமாக இருந்த தலைவன் உற்றுக் கேட்கின்றான்: "நாம் இவளை மணக்கத் தாழ்த்தலால் வருந்தியன்றோ தலைவி நம்மை இயற்பழிக்கின்றாள்? ஆதலின் உடனே விரைந்து வரைந்து கொள்ளல் நலம்' என முடிவு செய்கின்றான். மணம் பேசவரும் அவனைத் தலைவியின் தந்தையேற்று வேங்கை மரத்தடியில் அமர்ந்து மணம் பேசி முடிக்கின்றான். 7. கலி-41. (குறிஞ்சி-5)