பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 555 உண்டோ? மானைக் காக்க வேண்டும்; வருந்துவாருக்கு ஆறுதல் சொல்லவேண்டும்; புண்ணுக்கு மருந்தளிக்க வேண்டும். இவை செய்யாவிடினும் மேலும் கெடுதல் செய்யலாமா? (கலி120) என்று மாலையை நோக்கி வருந்துகின்றாள் ஒரு தலைவி. 'இம்மாலைக் காலம், ஒன்றையும் கல்லாமல் மூத்தவனுடைய ஞானக்கண் இல்லாத நெஞ்சு போலவே புற்சென்ற இருள் உலகில் பரத்தலைத் தாரா நிற்கும். இம்மாலைக் கண்ணே என் செயலறு நெஞ்சு கொதித்து எனக்குக் காமத் தீயைக் கொளுத்தும்; என் நெஞ்சம் அவனை உள்ளி அழிதலோடே தன் நினைவின்றியும் குவியும்; பூவின் அழகைக் கொண்ட என் உண்கண் தனிமையைக் கொண்டு வருந்தும்" (கலி - 130)-இப்படி மற்றொரு தலைவி இரங்கிக் பேசுகின்றாள். தலைவனது நீள் பிரிவிற்கு ஆழ்துயர் உறும் தலைவியை மேலும் அல்லற் படுத்துகின்றது மாலைக் காலம் என்று இரங்குவர் அந்துவனார். கூடியுள்ள காதலர்க்குப் பின்னும் புணர்ச்சியின்பம் அளித்தலும், பிரிந்திருக்கும் காதலர்க்கு மேலும் வருத்தும் துன்பத்தை நல்குதலும் ஆகிய ஒரவஞ்சனையைக் கொண்டது மாலை என்பதாக நெய்தற் தலைவி கருதுகின்றாள். வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும் காலை யாவது அறியார் மாலை என்மனார் மயங்கி யோரே...' என்று ஒரு தலைவி மாலைக் காலத்தைப்பற்றித் தோழிக்கு உரைக் கின்றாள். இது மாலை அன்று; புணர்ச்சியில் மயங்கிக் கிடப்ப வரே மாலை என்பர். மலர்களை அவிழ்க்கும் காலம் ஒன்று இருப்பதுபோல மகளிரின் உயிர்களை உடம்பினின்று பிரிக்கும் இறுதிக் காலம் ஒன்று உண்டு. அதுதான் இக்காலம்.’’ என்று மாலைப் பொழுதுக்கு ஆற்றாதவள் ஒரு புதிய காலம் படைக் கின்றாள் தான் தெளிந்தவள் போல, மற்றையோரை மயங்கி யோர் என்று தூற்றுகின்றாள். 'நல்லந்துவனார் ஒருவரே சங்கப் பனுவலில் பெருந்தினைப் பாடல்கள் யாத்தவர். ஐந்திணைத் தலைவியரின் பிரிவுணர்ச்சி களை எல்லைக் கோடளவும் சென்று பன்மானும் பாடவல்ல புலவர்க்கே பெருந்திணை பாடும் எண்ணமும், பாடவல்ல எளிமையும் ஏற்படும். களவியலில் மடல் ஏறி வரும் தலைவனது நாணிய செயலையும், கற்பியலில் ஊரறிய வெளிவந்து உற்ற இ1ெ9