பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேழியிற் கூட்ட மரபுகள் 167 கையும் தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல்; வேட்கை கூறி அறத்தொடு நிற்கும். கூறுதலாவது, தலைவியைத் தலைவற்குக் கொடுக்கவேண்டும் என்பதுபடக் கூறுதல். உசா வுதல் என்பது, வெறியாட்டும் கழங்கும் இட்டு உரைத்துழி வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல். ஏதிடு தலைப் பாடு என்பது, யாதானுமோர் ஓர் ஏதுவை இடையிட்டுக் கொண்டு தலைப்பட்டமை கூறுதல். உண்மை செப்புங்கிளவி யாவது, படைத்து மொழியாது பட்டாங்குக் கூறுதல். அவ்வெழு வகைய என்றதனால் உண்மை செப்புங்கால் ஏனைய ஆறு பொருளினுட் சில உடன் கூறி உண்மை செப்பலும், ஏனைய கூறுங் காலும் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலும் கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர். ஐங்குறுநூற்றுத் தலைவியொருத்தி தலைவனோடு கற்புக் கடம் பூண்டொழுகுங் களவுக் காலத்தே அர்துணராத பிறர் தலைவியை மனங்கோடற்பொருட்டுத் தமரிடம் மகட்பேசி வருவாராயினர். இதனை அறிந்த தலைவி இந்நிகழ்ச்சி தனக்கும் தன் குலத்திற்கும் கேடு பயக்குமே என்றஞ்சிப் பெரிதும் மனங் கவன்றவளாயிருந்தனள். தலைவியின் வருத்த நிலை கண்ட செவிலி இவள் வருத்தத்திற்குக் காரணம் என்னை என்று தோழியை வினவ, தோழி தலைவியின் கருத்தினையும் உணர்ந்து உண்மையுரைக்குமாற்றால் அறத்தொடு நிற்கின்றாள். அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி நனிநாண் உடையள் நின்னும் அஞ்சும் ஒலிவெள்ளருவி ஒங்குமலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ turrGsar. *** (நனி - மிகவும்: நின்னும்-நின்னையும்; மார்பின் பாயல் மார்பாகிய படுக்கை வெய்யள் - விருப்பமுடையவள்: நோகு - நோகின்றேன்! இதன்கண் மலைநாடன் ஒருவன் மார்பில் துயிலும் விருப்பம் உடையாள் எனக் குறிப்பிட்டதனால் மலைநாடன் ஒருவனுக்கு இவள் கற்புக்கடம் பூண்டுவிட்டாள் என்பதும், யான்நோகு' என்பதனால் அந்நிகழ்ச்சிதானும் பாலதாணையின் நிகழ்ந்தது. 176, ஐங்குறு - 205