பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 அகத்திணைக் கொள்கைகள் பிறர் நுகர்கின்றனர்; அது தினக்கு இழுக்கன்று' என்று கூறி அறிவுறுத்தித் தோழி அவள் ஊடலைத் தணித்தல் கண்டு மகிழத் தக்கது. இங்ஙனமே திருவள்ளுவர் படைத்துக் காட்டும் தோழி, உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (நீளவிடல்-அளவறிந்து உணராது கலவிமேல் எழுந்த குறிப்பு கெடும் அளவும் செல்லல்.) என்று கூறித் தலைவியின் புலவியெ.ழிந்து வாயில் நேரும் வகை யில் சொல்லிய அவளது சதுரப்பாட்டினை எண்ணி மகிழ்க. இங்ஙனம் தமிழ் நெஞ்சம் கண்ட தோழியின் திறனெல்லாம் தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பி அகப்பொருள் போன்ற இலக்கண நூல்களில் தொகுத்து உரைக்கப்பெறும்; சங்க இலக்கியங்கள் இவளைப் பல்வேறு கோணங்களில் விரித்துப் பேசும், சுருங்கக் கூறினால் தமிழ் நெஞ்சம் படைத்த தோழி, ...தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய் மந்திரியாய் நல்லா சிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான்.' என்று பாரதியார் படைத்துக் காட்டும் கண்ணன்-சேவகனுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடிய பெருமை வாய்ந்தவள். (vi) பரத்தையர் அகப் பொருள் நூல்களில் பரத்தையர் என்று கூறப்பெறும் ஒருவகைப் பெண்டிர் அக்காலத்தில் இருந்தனர். இன்று செல்வர் வாழும் பகுதிகளில் இத்தகையவர் பலர் இருப்பது போலவே, அன்றும் இருந்திருத்தல் கூடும்.” இவர்கள் அக்காலத்தில் அறவே இலர் என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. இல்லா 102. குறள்-1302 - 103. பாரதியார் கண்ணன்-என் சேவகன். அடி (52-55)