பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுை டயோர் 385 (மகிழ்நன் - தலைவன்; அன்னதாகலும் - அத்தகையது ஆதலும்; புலக்கும்-வெறுக்கும்; புதல்வன் தாய்-கலவிக்கு உதவாதவள் என்ற குறிப்பில் கூறியது) இதில், மலர்தோறும் சென்று வண்டுகள் படிந்து மதுவுண்டு களிப்பதுபோல் அவள் தலைவனும் அளவிறந்த காதற் பரத்தை யரைத் தோய்ந்து காமவின்பம் நுகர்கின்றான். வண்டுகளின் பண்பு கண்டு இவன் பயின்றனனா? இவன் பண்பு கண்டு வண்டுகள் இவனிடம் பயின்றனவா? என ஐயமுறும்படி அவன் செயல் இருக்க நான்தான் காரணம் என்று என்னோடு பிணங்கு கின்றாளே தலைவி? என்னையும் ஒரு காலத்தில் விட்டுப் பிரிந்து தான் போவான்' எனப் பரிவுடன் கூறுவாள்போலப் பரத்தை பகர்வதை அறிக. காதற் பரத்தையொருத்தி தன்னைத் தலைவி இகழ்ந்து கூறினாளென்று அறிகின்றாள். உடனே சினந்து தலைவியின் பாங்காயினார் கேட்கும்படி கூறுகின்றாள். கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கது உம் ஊரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலுந் தூக்கத் துரக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே,' " (கழனிமாத்துவயலருகிலுள்ள மாமரத்தினது; உகு-வீழ் கின்ற; பழன வாளை-பொய்கையிலுள்ள வாளை மீன்கள்; கதுTஉம்-கவ்வி உண்ணுதற்கு இடமாகிய, எம் இல்-எம் வீட்டில்; பெருமொழி-எம்மை வயமாக்குதற்குரிய பெரு மொழி; புதல்வன் தாய்-மனைவி) இதில் தலைவன் வீட்டில் இறைமை தலைவியின் பாலதாக, அவள் இயக்கியாங்கு இயங்குதல் தலைவனது பண்பாகக் காட்டுகின்றாள் காதற்பரத்தை. தலைவியைத் தலைவனுக்கு மனைவி என்று கூறப்பொறாத இவள் அவளைப் புதல்வன்தாய் என்கின்றாள்; தலைவியின் முதுமையையும் இகழ்ந்த இகழ்ச்சிக் குறிப்பு இதில் தொனிக்கின்றது. இது மனம்வேறுபட்ட பரத்தையின் கூற்றாதலின் 116. குறுந்-8. அ-25