பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 317 வனைக் குறிப்பிடுமிடத்து பரத்தையின் கூற்றாக (தோழியின் கூற் றாகவும்?) நற்றிணைப் புலவர், நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிட மகன் என்னாரே' எனக் குறிப்பிடுவதைக் காண்க. பாலைக் கலியினும் "தலைவி யொருத்தி பொருள்வயிற் பிரியும் தலைவனை நோக்கி, அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற இனி" என்று கூறுவதைக் காணலாம். ஒரு பெண் மனம் உடைந்த நிலை யில்தான் இத்தகைய சுடு சொல்லைக் கையாள்வாள் என்பது அறியத் தக்கது. வள்ளுவப் பெருந்தகையும்’ பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல்' என்று கூறி இச் சொல்லை எதிர்மறையில் வைத்து விளக்குவதை யும் காணலாம். இத்துணைச் சிறப்பு வாய்ந்த விழுமிய சொல் லுடன் தலை’ என்ற அடைமொழியும் சேர்ந்து தலை மகன்’ என்ற பெயரால் கூறப்பெறும் அகத்திணைத் தலைவனின் பெருமை களை எண்ணி ஒர்க. இத்தகைய தலைமகனின் பெருமையைத் தொல்காப்பியமும், - பெருமையும் உரனும் ஆடுஉ மேன’’ என்று சிறப்பித்துப் பேசுகின்றது. பெருமை என்பதற்கு அறிவு ஆற்றல் புகழ் கொடை ஆராய்ச்சி பழிபாவங்கட்கு அஞ்சுதல்ஆகிய பெருமைக்குரிய குணங்கள் உரன் என்றும், என்பதற்குக் கடைப்பிடி யும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலிமையின் பகுதி என்றும் நிச்சினார்க் கினியர் கூறுவர். இடையூறு வந்த காலத்தில் நெஞ்சமிழந்து வெகுள்தலும் இன்பம் வந்துற்றபோது மகிழ்தலும் போன்ற எளியோரிடம் காணப்பெறும் குணங்களின்றி எப்போதும் ஒரே பெற்றியினனாக இருக்கும் பெருமையினை உடையவன் இவன். இவன் கடமையை மறவாது போற்றுபவன் என்பதைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ, 18. நற்-290, 19. கலி-18 (அடி 4-7) 20. குறள்-196. 21. களவியல்-7