பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் பற்றிய குறிப்புகள் 219 என்ற பாடற்பகுதியால் இதனை அறியலாம். குறுந்தொகைத் தலைவியொருத்தி தமரின் நீங்கித் தலை வனுடன் செல்கின்றாள். பாலை நிலத்தில் இவர்கள் போகும் பொழுது ஆற்றெதிர்ப்பட்டோர் இவர்களைக் காண்கின்றனர். இவர்கள் யாரோ என ஐயுறுகின்றனர். - வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே" என்ற பாடலில் இதனைக் காணலாம். 'வில்லேந்திய இவன் காலில் வீரக் கழல்கள் உள்ளன. வளையல் அணிந்த இவள் மெல்லடிகளில் சிலம்புகள் உள்ளன' என்று காலடி நோக்கி இன்னும் திருமணம் ஆகாதவர்கள் எனத் துணிகின்றனர். ஈண்டும் சிலம்பு அணிந்துள்ளமை திருமணம் ஆகாமையை உணர்த்துதல் காண்க. எனவே, காலில் சிலம்பு உடையவள் குமரியாவாள் என்பது அறியப்படும்.' திருமணம் ஆன நங்கைக்கு சிலம்புக்கழிவு இன்றியமையாத குறியாக அமைந்தது; சிலம்புகழி நோன்பு என்பது ஒரு கரண மாகக்-சடங்காகக்-கொள்ளப்பட்டது. சங்க காலத்தில் இது ஒரு சமுதாய வழக்காகவும் இருந்தது. தலைவி உடன் போகிய காலத்து உறவின ரில்லாத புதியதொரு நாட்டில் திருமண்ம் செய்து கொண்டாலும், ஆண்டும் சிலம்பு கடுநோன்பு நிகழும். உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்த் சிறுவன் கண்ணி சிலம்பு கழிஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே." (முள்எயிறு-கூரிய பல்; வன்கண்ணி - கண்ணோட்டமில்லா தவள்.) என்ற பாடற்பகுதியில் தன் மகள் சென்ற நாட்டில் சிலம்பு கழித்தல் கொடிது என ஒரு தாய் சினப்பதைக் காண்கின்றோம் . 15. குறுந்-7. - - - * 16. திருமணம் ஆன கண்ணகிக்குக் காலில் சிலம்பு இருந்தது. சிலப்பதிக்காரகாலத்தில் இவ் வழக்கு இறந்தது போலும். 17. அகம்-385, -