பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அகத்திணைக் கொள்கைகள் இன் இயம்-இனிய வாச்சியம்: படர்மலி-கருதுதலில்: அரு நோய்-காமநோய்; அணங்குதல்-வருந்தித் தரப்படுதல்; அண்ணாந்து-தலை நிமிர்ந்து, கடம்பின் கண்ணி-கடம்ப மாலையாலான தலை மாலை; வெறிமனை-வெறிக்களம்; மன்ற-திண்ணமாக; வாழிய - இத்தகைய இடங்களில வாராது வாழ்வாயாக! இங்கு கற்பு, தெய்வத்தையே எள்ளுகின்றது. தலைவியின் நோய் காதல்நோய் தலைவன் மார்புத் தழுவலால் ஏற்பட்ட நோய். கடவுளாக இருக்கும் நீ இதனை அறிந்திருப்பாய். ஆயினும் மரபு அறிவு அன்றி மெய்யறிவு இல்லாத வேலன் அழைக்கத் தோன்றிய முருகா! என் சொல்வேன்? நீ கடவுளாக இருப்பினும் உனக்குச் சொந்த புத்தி இல்லை. இத்தகைய இடங்கட்கு இனி வாராது வாழ்க என்கின்றாள் தோழி. ஐங்குறுநூற்றுத் தோழி ஒருத்தி கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்றஇவள் நோயே என்று கூறுகின்றாள். காதல் நோயைக் கழற்சிக்காயால் அறியப் புகுவது கற்பு மேன்மைக்கே அவமானம் என்பது இவள் கருத்து. வெறியாடு காலத்தில் தலைவியின் களவுத் தொடர்பினை தாய் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ அறிய வாய்ப்பு உண்டு. தலைவியும் தோழியும் அவளுக்கு அறிவிக்கவே முயல்வர். அகவன் மகளே' எனத் தொடங்கும் குறுந் தொகைப் பாட்டில் தோழி தலைவியின் களவை அறத்தொடு நின்று குறிப்பாக வெளிப்படுத்துவதைக் காணலாம். சிறைப் புறத்தில் இருக்கும் தலைவனை நோக்கி ஐங்குறுநூற்றுத் தோழி இவ்வாறு பேசுகின்றாள்: ‘i (; 7 . பொய்யா மரபின் ஊர்முது வேலன் கழங்குமெய்ப் படுத்துக் கன்னந் நூக்கி முருகென மொழியு மாயின் கெழுதகை கொல்இவள் அணங்கீ யோற்கே. மெய்ப்படுத்து - ஆராய்ந்து; கன்னம் - நோய் தணித் தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம்; இது பொன்னாற் 107. ஐங்குறு - 248 108. குறுந். 23 109. ஐங்குறு-248