பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் 459 யாசிரியர் இந்த இரண்டு நூற்பாக்களுக்குப் பொருள் கூறுங்கால் வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என்ற ஐந்து வகையாக உள்ளுறை அமைக்கப்பெறும் என்று கூறுவர். இஃது அவர் உரை நோக்கி அறியப் பெறும். தவலரும் சிறப்பின் என்று தொல் காப்பியர் சிறப்பித்தது அகப் பொருளுக்கு உள்ளுறை உவமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்துவதற்கே யாகும். உள்ளுறை கூறுவோர் : இந்த உள்ளுறை உவமை கூறுங் கால் தலைவன் முதலியோர் கூறும் முறைகட்கும், இன்னின்னார் தாம் உள்ளுறை உவமம் கூறுவதற்கு உரியவர்கள் என்பதற்கும், அங்ஙனம் கூறும்போது யார் யார் எப்பொருள்களை அமைத்துக் கூறவேண்டும் என்பதற்கும் விதிகளை வகுத்துள்ளார் தொல் காப்பியனார். பெரும்பாலும் இவ்வுவமை அகவாழ்வில் நேரிடும் இன்பதுன்பங்கள்பற்றியே வரும். ஆசிரியர் தொல் காப்பியனார், . இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் உவம மருங்கில் தோன்றும் என்ப." இனிதுறுகிளவி - மகிழ்ச்சி பயக்கும் கூற்று; துனியுறுகிளவி புலவி பயக்கும் கூற்று) - - என்று இதனைப் புலப்படுத்துவர். தலைமகள் அதிகமாக வெளியில் திரிந்து அனைத்தையும் அறிந்தவள் அல்லளாதலின், அவள் அவளறிந்த கருப்பொருள்களை மட்டிலுமே அமைத்துக்கூறுவாள். தோழிக்கு அதிகத் தொலைவு செல்லும் பழக்கம் இல்லை யெனினும் தலைவி உறையும் நிலத்தைப்பற்றி நன்கு அறிந்திருப் பவளாதலின் அந்நிலத்திலுள்ள எல்லாக் கருப்பொருள்களையும் அமைத்து உள்ளுறை உவமம் கூறுவாள். தொல்காப்பியர் இதனை, - - கிழவி சொல்லின் அவளறி கிளவி தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது” என்று விதியால் பெற வைப்பர். அன்றியும், தலைவி இந்த இன்ட துன்பங்களைப் புலப்படுத்தும் இடங்களில் மட்டுந்தான் கூறு வதற்கு உரியவள் என்பது இளம்பூரணர் கருத்து. 7. உவம - 30 8. ைெடி - 26 (பேரா)