பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 189 (அலர்-பழி மொழி: சேரி-தெரு, ஆனாது-அமையாமல்; அலைக்கும்-வருத்தும்; தயங்க-விளங்க; உணல்-உண்ணல், ஆய்ந்தசின்-நினைந்தேன்; சேய்நாடு - தொலைவிலுள்ள நாடு, விண்-வானம்; நிவந்த-உயர்ந்த விலங்கு-குறுக் கிட்ட கவான்-மலையடிவாரம்; அடிவழி-அடிச்சுவடு வயாவும் வருத்தமும் பட்டு, ஈன்று, பால் நினைந்து ஊட்டிப் பருவம்வரை வளர்த்த அன்னையை அறனில்லாதவள் என்கின் றாள். உரக்கக் கடிவதை அலைப்பதாகக் கருதுகின்றாள். அதனால்தான் ஊரில் அலர் எழுவதாகவும் நினைக்கின்றாள். இதுகாறும் தான் வாழ்ந்த மனையை அன்னையின் மனை என்றும், தன்னோடு மகிழ்ந்திருந்த அன்னை தனித்து வருந்தட்டும் என்றும் கருதுகின்றாள். அன்னையுடன் இருக்குங்கால் கிடைக் கும் நல்ல நீரையும் காய் கணிகளையும் வெறுத்துக் காதலனோடு மலைவழிச் சென்று நெல்லிக்காயைத் தின்று கலங்கிய நீரைப் பருகி மகிழ்வதாகச் செப்புகின்றாள். உண்மையில் இது வேண்டாத அச்சமாகும். தாய்க்கு உண்மையை உணர்த்தாது அவளைக் கொடியவள் என்று கடிவது பொருந்தாது. உண்மையை அறிந்த பின்னர் எந்தத் தாயும் துறக்கத் தக்கவளாக நடந்து கொள் ளாள் என்பது இலக்கியத்தில் காணும் உண்மையாகும். அகநானூற்றுத் தலைவி ஒருத்தி காதலனுடன் ஏகிய பின்னர் அவள் அன்னை படும் பாட்டையும் அவள் ஆற்றாமையையும் அன்பையும் கபிலர் மிக அழகாகப் புலப்படுத்துவர்.' ஊர் மக்கள் இடைவிடாது அன்னையிடம் பழிமொழி செப்புகின்றனர். அதனை அவள் தன் மகளிடம் சொல்ல நினைக்கவில்லை. தன் மகளின் நாணத்திற்கு அஞ்சியே சொல்லவில்லை. மகள் நீங்கிய தன் இல்லத்தைப் பொலிவற்றதாகக் கருதுகின்றாள். அன்னை அறியின் இவனுறை வாழ்க்கை எனக்கெளிதாகல் இல் என மகள் கருதிய அறியாமைக்கு இரங்குகின்றாள். தான் அச்சுறுத்தும் தாயர் வழிவந்தவள் இல்லை எனக் காட்டிக் கொள்ளத் துடிக் கின்றாள். காதலர்கள் பகல் எல்லாம் சுரநெறி கடந்து இரவில் ஒரூரில் தங்குங்கால், அவ்வூருக்குத் தான் முன்னரே சென்று அவர் களை விருந்தாக ஏற்றுத் தங்குமிடம் நல்கி நல்லன்பைப் புலப் படுத்தும் வாய்ப்புக் கிட்டாதா என்று வேணவாக் கொள் கின்றாள். இதனால் களவு நங்கையரே தம் மறையொழுக்கத் 219. அகம்-203.