பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#)0 அகத்திணைக் கொள்கைகள் ஒரு தலைவனுக்கும் தொடர்பு உண்டு என்று அலர் தூற்று கின்றனர். இவ்வலர் அறிந்த தலைவி வருந்தினாள் அல்லள். தன்னைத் தலைவனுடன் சேர்த்துப் பேசப் பேச அவளுக்குப் பெரு மகிழ்ச்சி. ஊருக்கு உண்மை தெரிந்தது எனக் களிப்பெய்து கின்றாள். இனித் தன் வீட்டார் அந்தப் பொதுவ னுக்கே தன்னை மணப்பிப்பர் என்று நம்புகிறாள்; தன் கற்புக்கு எவ்வாற் றானும் ஊறு இல்லை என்று நன்முறையில் அலரை மதிக்கின்றாள். ஒண்னுதால், இன்ன உவகை பிறிதியாது யாயென்னைக் கண்ணிடைக் கோலள் அலைத்தற் கென்னை மலரணி கண்ணிப் பொதுவனோ டென்றண்ணி அலர்செய்துவிட்டதில் ஆர்." (துதல்-நெற்றி, இன்ன-இப்படிப்பட்ட) என்ற கலிப்பாட்டில் இந் நிகழ்ச்சியைக் காண்க. இதன்கண் தலைவி, உற்றவரே துற்றின் ஊரார் துாற்றுவது இயல்பேயாகும், அவர் அங்ஙனம் துாற்றியதனால்தான் யான்பேருவகை துற்றிஉயிர் தாங்கியிருக்கின்றேன் என்று தோழிக்குக் கூறுகின்றாள். திருக் குறள் தலைவியும் அலரெழ ஆருயிர் நிற்கும்' என்று கூறுவது ஈண்டு எண்ணத் தக்கது. குறுந்தைாகைத் தலைவியொருத்தி அலர் எழுந்தமை கண்டு அஞ்சுகின்றாள். தோழி அவளை, நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக் கேடெவன் உடைத்தோ தோழி? ஒங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.' (புடை பெயர்தல்-இடம் மாறுதல்; பிறழினும்-இயற்கை யினின்று மாறினாலும், கெளவை-அலர் கேடு-கெடுதல்: எவன்-எவ்வாறு என்று சொல்லித் தேற்றுகின்றாள். உலகு பிறழ்ந்தாலும் ஊழ்வலியால் அமைந்த தொடர்பு கெடாது என்று உறுதி கூறு கின்றாள். 53, கலி.105 54. குறள்-1141 35. குறுந் 373