பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-24 தலைமக்களுடன் உறவுடையோர் அகத்திணை உலகில் காணப்பெறும் தலைமக்களுடன் ஏதோ ஒருமுறையில் மிக நெருங்கிய உறவுடையோராகக் கருதப்பெறு பவர்கள் அறுவர். இவர்கள் தலைவியின் நற்றாய், தலைவியின் தந்தை, செவிலி, பாங்கன், தோழி, பரத்தையர் என்று வழங்கப் பெறுபவர்கள். தலைவனின் தாய் தந்தையர்களைப் பற்றிய குறிப்புகளே இல்லை. ஓரிடத்தில் உடன் போக்கில் தலைவியைக் கொண்டு கழிந்த கொடுமையை நினைந்து வருந்தும் நற்றாய் தலைவனின் தாயும் தன்னைப் போன்று பெருந்துயர் எய்தக் கடவதாக என்று கூறுகின்றாள். . நினைத்தொறுங் கவிழும் இடும்பை எய்துக, வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே." (கவிழ்தல் - கண் கலங்கி அழுதல் இடும்பை - துன்பம்: வம்பு அமை - புதிய மூங்கிலால் செய்யப்பெற்ற விடலை - தலைவன்) என்ற பாடலில் இக்குறிப்பினைக் காணலாம். நற்றிணையிலும் இத்தகைய தாய் ஒருத்தியினைக் காண்கின்றோம். இவளும் தம் மகளை உடன் கொண்டகன்ற காளையைப் பெற்ற தாயும் தன்னைப் போலவே நடுங்கி நொந்தழியுமாறு கூறுகின்றாள், விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் பெருவிதுப் புறுக மாதோ எம்மில் 1. ஐங்குறு 373