பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-32 துறையால் சிறப்புப் பெயர் பெற்றோர் துறைபாடிய பெருமையால் சிறப்புப்பெயர் பெற்ற இரு சங்கச் சான்றோர் காணப்பெறுகின்றனர். அவர்களுள் ஒருவர் மடல் பாடிய மாதங்கீரனார்! மற்றொருவர் வெறி பாடிய காமக் கண்ணியார். இவர்கள் இருவரைப்பற்றி இந்த இயலில் சிறிது கூறுவோம். (i) மடல்பாடிய மாதங்கீரனார் இந்நூல் பக்கம் (118-120) காண்க. இவ்விடத்தில் திருமங்கையாழ்வாரின் மடலூர்தல்பற்றிய கருத்தினை ஆராய்வது பொருத்தமாகும். ஆடவன் மகளிரைக் குறித்து மடலேறலாமேயன்றி பெண் ஆடவனைக் குறித்து மடலூரலாகாது என்பது தமிழ் நெறியில் விதிக்கப்பெற்ற ஒரு வரம்பாகும். எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான" என்பது தொல்காப்பியம். திருவள்ளுவரும், கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்." - என்று இந்நெறியினை வலியுறுத்துவதைக் காணலாம். திருமங்கையாழ்வார் பிராட்டி தசையை அடைந்து பரகால நாயகி ஆனபின்னர் மடலூரப் புகுதல் பொருந்துமோ என்ற வினா `ಿFTಥ್ರ-8 (@ari) 2. குறள்-1137.