பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத்துவத்துறையில் அணு

219


கதிரியக்க ஓரிடத்தான்கள் பெரிதும் துணைபுரிகின்றன. சாதாரணக்கறி உப்பினை61 சுழலினி62 என்ற பொறியிலிட்டு உப்பிலுள்ள சோடியத்தைக் கதிரியக்கக் கிளர்ச்சியுடையதாகச் செய்து இதற்குப் பயன் படுத்து கின்றனர். இந்தச் சோடியம் பெற்ற கிளர்ச்சி சில மணிநேரம் நீடித்திருக்கும். இந்தக் கதிரியக்க உப்பில் ஒரு சிறு பகுதியைச் சாதாரண உப்புடன் கலந்து உணவுடன் உண்டால், கறி உப்புடன் கதிரியக்க உப்பும் சென்று குருதியில் கலந்து விடும். உடலில் குருதி ஓடிவரும் இடம் எங்கும் இந்த உப்பும் கூடவே செல்லும். அங்கெல்லாம் இதன் அணுக்கள் வெடித்து காமா-கதிர்களை வீசும். அழுகிய உறுப்பின் அருகே கைகர் எண் - கருவியைக் கொண்டு சோதித்தால், எந்த இடத்துடன் குருதியோட்டம் தடைப்பட்டு நின்று விடுகிறது என்று துல்லியமாக நிர்ணயித்துவிட முடியும். (படம்-33)

கதிரியக்கப் பாஸ்வரமும் சத்திர சிகிக்சையின் பொழுது சிறந்த குறையறி கருவியாகப்63 பயன்படுகின்றது. மூளையில் ஏற்பட்டிருக்கும் சிலவகைப் பிளவைகளின் இருப்பிடத்தைக் கண்டறிய இக்கதிரியக்கப் பொருள் பயன் படுத்தப்பெறுகின்றது. மூளையின் இழையங்கள் உட்கிரகிக்கும் பாஸ்வர அளவைவிட இப் பிளவைகள் அதிகமான பாஸ்வரத்தை உட்கிரகிக்கின்றன; பாஸ்வர மருந்துடன் இக்கதிரியக்கப் பாஸ்வரத்தைக் கலந்து நோயாளியின் பாய்குழல்கள்64 வழியாக ஊசிமூலம் குத்திப் புகுத்தப் பெற்றால் அது மூளையில் செறிந்து திரளுகின்றது. ஊசி போன்ற கைகர் எண் - கருவியைக் கொண்டு மருத்துவர் கழலையின் இருப்பிடத்தைத் தேடுங்கால், சில ஒளிகள் சற்று மெதுவாகவும் ஒரே நிதானமாகவும் அணைந்து எரியும். கழலையுள்ள இடத்தில் திடீரென ஒளிகள் மிகவும் விரைவாக அணைந்து எரியும். இந்த இடம்தான் கழலேயுள்ள இடம்.


61கறி உப்பு, சோற்றுப்பு - common salt. 62 சுழலினி-cyclotron. 63குறையறி கருவி - diagnostic tool. 64பாய் குழல் - vein