பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

201



ஹார்வார்டு மருத்துவ நிலையத்தில் செய்யப்பெற்ற ஆராய்ச்சியால் குரோமியம் உடலின் பல இழையங்களிலும் புகுகிறது என்றும், அது சில நிமிடங்களில் குருதியணுக்

கதிரியக்க அயம்-59
(உடல் அயத்தைப் பயன்படுத்துவதை ஆராய்வது)



படம்-31

இச்சோதனையால் அறியப்பெறுபவை: (i) தேவையுள்ள பொழுது அயம் உறிஞ்சப் பெறுகின்றது. (ii) ஒரு சிறு பகுதி அயமே உடலுக்குத் தேவைப்படுகிறது. (iii) பெரும்பாலும் அயம் கல்லீரலிலும் மண்ணிலிலும் சேமித்து வைக்கப் பெறுகின்றது. (iv) பெரும்பாலும் பழைய சிவப்பு அணுக்களிலிருந்தே புதிய சிவப்பு அணுக்கன் உண்டாக்கப்பெறுகின்றன.

களைத் துளைத்துச் சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கி விடுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். உடலிலுள்ள எந்த உயிரணுக்களில் எப்பகுதியில் அது நுழைகிறது என்பது ஆராயப்பெற்று வருகின்றது. இன்னும், நரம்புகளில் கால்சியத்தின் வேலை என்ன என்பதையும், இன்சுலின் உண்டாவதில் துத்தநாகம் எவ்வாறு பங்கு பெறுகின்றது என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.