பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவுத்தொழிலும் அணுவும்

247


 கடலையும் உண்டாக்கப் பெற்றுள்ளது. கதிரியக்கத்தால் உண்டாக்கப்பெறும் மாறுபாடுகள் யாவும் விரும்பத் தக்கனவாக இரா. ஒரு பண்ணையில் பயிர்கள்மீது அணுக்கதிர்கள் படுமாறு செய்யலாம்; அதனால், விரும்பத்தக்க மாற்றங்களையடைந்த தாவரங்களை மட்டிலும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு சிறந்தவகைத் தாவரம் கிடைப்பதற்குள் நூற்றுக் கணக்கானவற்றைக் கழித்து விடவும் நேரிடும்.

காமா நிலம்[1] என்ற ஏற்பாடு (படம் - 40.) பண்ணையிலுள்ள தாவரங்கள்மீது கதிர்களை விழச் செய்வதற்கு செய்யப் பெறும் ஒரு வழியாகும். மூன்று ஏக்கர் நிலத்தின் நடுவில் கறை பிடிக்காத எஃகுக் குழாய் ஒன்றில் சிறிதளவு கோபால்ட்டு-60 ஐ வைத்து மூடி வைப்பர், இப்பயிர் நிலத்தின் ஒரு மூலையிலுள்ள கட்டுப்படுத்தும் வீட்டிற்கும் கோபால்ட்டு-60 க்கும் இடையே கம்பிகள் மூலம் இணைப்பு உள்ளது. கோபால்ட்டு-80 ஐ ஒரு காரீயக் கவசத்தில்

வைத்து பூமிக்குள் தாழ்த்தும் வரை அந்தப் பயிர் நிலத்தில் யாரும் நுழைவதில்லை. தாவரங்களிடம் சடுதி மாற்றங்களை விளைவிக்கும் இந்தக் கதிர்கள் மனிதர்களுக்குத் தீங்கு செய்-


  1. 41 காமா நிலம் - gamma field