பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தோழர் மிவாஸ்கி

'கிராம ஊழியன்' மாதமிருமுறையில் மிவாஸ்கி எழுதிய உணர்ச்சிச் சித்திரங்கள் வெளிவந்தபோது, என்னிடம் பலரும் கேட்டார்கள். 'உங்களுக்கு இத்த மிவாஸ்கியின் எழுத்துக்கள் எப்படிக் கிடைத்தன ? அவற்றை யார் இவ்வளவு அழகாக மொழி பெயர்க்கிறார்கள்’ என்று. தோழர் மிவாஸ்கி ரஷ்ய நாட்டிலே உள்ளவரல்ல. தமிழரிடையே தமிழாாக வாழ்கின்ற ஒர் தமிழன்தான். உழைப்பாளிகளிடையே உழைப்பாளியாக வாழ்கின்ற ஒரு எழுத்தாளன்தான் என்று நான் அறிமுகம் செய்யவேண்டியது அவசியமாயிற்று.

என்றாலும் ரசிகர்கள் மிவாஸ்கியின் மொழி பெயர்ப்புக் கதைகள் மிக நன்றாக உள்ளன என்று பாராட்டுவதைவிட மறுத்தார்கள். தோழரின் பெயர் அவ்வித மயக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ’உணர்ச்சி களையும் சொல்லையும் வைத்து விளையாடுகிறேன்’ என்று கூறி புது ரகமான இலக்கிய சிருஷ்டிகளை எழுதுகிற மிவாஸ்கியின் எழுத்துக்களிலே தனி வேகமும் கொதிப்பும் உள்ளப் புழுக்கத்தின் அனல் மூச்சும், லட்சிய வெறியின் உயிர்ப்பும் மிளிர்கின்றன.

மனிதகுலச்சிறுமைகளைக் கண்டு மனம் புழுங்கி, குமுறிக் கொதிப்புற்று சமுதாயத்தின் மீது சமுதாய முறைகள்மீது வெறுப்பும் கோபமும் கொண்டு. எழுத்திலே அனல் பாய்ச்சும் தோழர் மிவாஸ்கி அரசியல் கட்சி எதனிலும் தொடர்பு இல்லாதவர்.