பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். உழைப்புக்கு விலையில்லை.

அதனால், அவர்கள் பட்டினிப் பட்டாளத்தினராகி மண்ணோடு மண்ணாய் சாய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கு வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டிருப்பதேன்?

ஒரே காரணம் -

அவர்கள் உழைப்போரின் குடும்பத்திலே உழைப்பை நம்பி உயிர்வாழ வேண்டிய ஜந்துவாகப் பிறந்து விட்டது தான்.

தொழிலாளியின் மகன் தொழிலாளியாகத் தான் வாழவேண்டும் என்று சமுதாயம் சொல்லவில்லை. அது தவிர வேறு வழியில்லை. சமுதாய அமைப்பு முறை - பொருளாதார நிலை- அப்படித் தான் வழிகாட்டுகிறது.

இதே வேளையில், மற்றொரு காட்சியையும் காணுங்கள்!

இதோ வாயிலே 'வில்ஸும்'. மேலே கமகமக்கும் யு டீ கொலானும், முகத்திலே குட்டிக் கூராவும் சேர்ந்து ஏக அமர்க்களமான வாசனை அலைகளைப் பரப்பும் பதார்த்தமாக அலைகின்றானே சின்ன முதலாளி -

அவனிடம் திறமை இருக்கிறதா? அவன் உழைத்தானா; உழைக்கத் தயாராக இருக்கிறானா?