பக்கம்:கனியமுது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

ஊற்றுப்போல் நீர்சொரியும் கண்க ளோடும்
உடனேதன் தந்தையின்பால் ஓடி வந்தாள்!
ஆற்றொண்ணாத் துயர்க்கடலில் ஆழ்ந்தார் தந்தை!
ஆராய்ந்து பண்பறிந்து வரன்தே டாமல்,
காற்றுள்ள நேரத்தில் தூற்றிச் சென்ற
கயவரது புரட்டுகளை உண்மை யென்று
சாற்றுகின்ற சாத்திரத்தால் மோசம் போனார்;
சாதகத்தைத் தீயிலிட்டுச் சூளுரைத்தார்!


"என்மகளைத் துச்சமென எண்ணிக் கொண்ட
இழிமகனுக் கொருபாடம் புகட்டு கின்றேன்!
நன்மகனைத் தரவியலாச் சாத்தி ரத்தால்
நடைபெற்ற திருமணத்தை விலக்குச் செய்வேன்
இன்முகமும், பொன்மனமும் பெற்ற வேறோர்
ஏழைக்கு மறுமணமாய் மகளைத் தந்து,
தன்மதிப் பைக் காத்திடுவேன்!" என்றார். அந்தத்

தையலுமே மனமிசைந்து, வாழ்வு பெற்றாள்!

16

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/27&oldid=1459282" இலிருந்து மீள்விக்கப்பட்டது