பக்கம்:கனியமுது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


தத்துவத் தார்க்குச் சேர்த்துத்

தனியிடம் மறைந்து நின்றாள்;

பித்தனாய் மாறி னாற்போல்

பெருங்குர லெழுப்பி அன்னார்,

"சித்தமே அறிந்தி டாது

சென்றாயே, உயிரே உன்னை

நித்திய கன்னி யாய்என்

நினைவிலே பதித்திருந்தேன்!


தனியனாய் வாழ மாட்டேன்

தங்கமே உனப்பி ரிந்தே

இனியெனக் கென்ன வேலை ?

என்கல்வி உன்னைக் கொன்ற

சனியனே?’ எனச்ச பித்துத்

தற்கொலை செய முயன்றார்,

"இனிமையின் எல்லை கண்டேன்.

எனையாள்வீர்!" எனத் தடுத்தாள்!

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/43&oldid=1380090" இலிருந்து மீள்விக்கப்பட்டது