பக்கம்:கனியமுது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

செல்வம் குவித்துந் திருப்தி யடையாமல்
பல்வகை யாற்பாடு பட்டிடுவர், எப்போதும்
மென்மேலுஞ் சேர்க்க விழையும் அமெரிக்கர்,
நன்முறையில் இல்வாழ்வை நாடி அனுபவியார்;
காதலெனும் பேரின்பங் காணா இயந்திரமாய்
மோதிடுவர், என்று மொழியுந் திரைப் படமாம்!

எத்தனையோ மாநிதியை ஈட்டித் திரட்டிடினும்
சித்தங் களிப்படையச் செய்யாது போமாகில்
எற்றுக்குச் செல்வம் ; எதிரி மதித்திடவோ?
வெற்றுத்தாள் தாமே, விளைவென்ன ? என்பதெல்லாம்
காட்சிகள் வாயிலாய்க் காட்டித் தெளிவுறுத்தும்

மாட்சிமை வாய்ந்த மகத்தான வாய்ப்பாம்!

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/106&oldid=1380116" இலிருந்து மீள்விக்கப்பட்டது