பக்கம்:கனியமுது.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


இந்தவித வாழ்வதுவும் நிலைத்திட விலையே
ஏமாந்த நேரத்தில் - கொழுத்த பசு ஒன்று
கொம்பாலே குத்தி அவனைத் தூக்கிப் போட்டதாலே
வீழ்ந்தான், இறந்திட்டான் இதயம் அளித்தவனும்
மீண்டும் கண்ணீர்! மீண்டும் கருப்புடை!
மீண்டும் கைம்பெண்! மீண்டும் பெருநிதி!
வழக்கறிஞர் வாழ்விழந்த அவளுக்கு
மறைந்தவன் விடுத்துச் சென்ற மாநிதிஅளித்திட்டார்
பொருள்மேல் பொருளாய் வந்து சேருது-
பொன்னவிர் மேனியாள் மனமோ வேகுது.
பொருள்தேடி அலைந்தலைந்து வாழ்விழந்தாரே
பொருளே! எனக்கென்ன உன்னாலே பயனே!
விம்முகிறாள் பெண்ணவளும் செல்வச் சுமைதாங்கி
விழிஅழித்துப் பொன்னாலே திரைதேடிடல் போல்
வாழ்வழித்துப் பணம் என்னை வந்தடையுதந்தோ!
போயொளிவேன் எங்கேனும் பிறர்காணா வண்ணம்
எனை அறிந்தார் கண்டால் என்ன பேசுவரோ!

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/127&oldid=1380236" இலிருந்து மீள்விக்கப்பட்டது