பக்கம்:கனியமுது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

ஆயின் அத்தனையும் அவ்விருவர்க்காகத் தானா?
அல்ல ! அவனியோர் கண்டிடும் படத்தினுக்காக?
ஆடை அணிமுறைகள் தமை அறிவிக்க
வாணிபம் பெருக்கிட–விளம்பரம் தனுக்கே!
அலுத்துக்கொண்டாள் சலித்துப் போனாள் அழகுமிக்காள்
ஆடம்பரச் சூழலில் மன அமைதிதான் ஏது?
ஏதுக்குப் பொருள் தேடி அலையும் இவ்வாழ்வு?
இருப்பதுடன் வசித்திடுவோம் சிற்றூரும் சென்று
கொஞ்சுமொழிக் குமரி கூறிடவே அவனும்
கோலாகல மிக்க வணிக உலகு விட்டுப்
பச்சைப் பசேலெனும் பாங்குள்ள இடத்தில்
மாடு கன்றுகளுடன் விவசாயம் மேற்கொண்டான்
அங்கு, வயலிலே சிறந்தது என்வயலே எனவும்
விளைச்சல் மிகுவது என்னுடையதே எனவும்
பசுவில் உயர்ந்தது என்னிடமே எனவும்
பாங்குபெற முனைந்தாலும் வெற்றியே கண்டான்

சிறிதளவு நிம்மதியும் பெற்றிட்டாள் மாது!

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/125&oldid=1380277" இலிருந்து மீள்விக்கப்பட்டது