பக்கம்:கனியமுது.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

தோழன் குரங்கொன்று தூரிகையால் தீட்டுவதை
ஆளன் திருத்தி அழகாய் மெருகூட்டி
விற்பனை செய்வான் விலையும் அதிகமில்லை !
அற்புதமாய் ஓர்நாள் அதிகப் பொருள் தந்தே
ஒப்பற்ற ஓவியம் என்றே உயர்த்திவிட —
அப்பொழுதே ஆபத்தும் ஆரம்பம் ஆகியதாம்!

கோடுகளே காவியமாய்க்—கொட்டியதே ஓவியமாய்
நாடு புகழ்ந்தது; நாடிவந்து செல்வம்
குவிந்தது ! கோல மயிலனையாள் கொள்கை
அவிந்தது ! மாய்ந்தது அவள் வேண்டும் ஏழ்மை!

விழா எடுத்தார்; ஓவியனும் வெற்றி உலாவந்தான்;
அழாக் குறையாய்ப் பெண்ணழகி அங்கே குமைந்திட்டாள்
தேவை மிகுதியினால் தேர்ந்த பொறியமைத்தான்

ஓவியங்கள் ஏராளம் உற்பத்தி செய்து விற்றான்!

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/132&oldid=1380272" இலிருந்து மீள்விக்கப்பட்டது