பக்கம்:கனியமுது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

தாயாகிப் பிள்ளை பெறும் இயந்திரம் போல்
      தாங்கவொணாத் துயரத்தைச் சுமந்த தாலும்,
ஓயாத உழைப்பாலும் உடல்க லிந்தே—
      உணவுக்கே அனுதினமும் போராட்டத்தால்
நோயாகிப் படுக்கையுடன் கிடக்க லானாள் !
      கொடித்து வீழ்ந்த குதிரைக்குக் கால்முறிந்து
நாயாக நலிந்துயிரை விட்ட தாலே—
      நைந்துமனம் நெகிழ்ந்துருகித் தேய்ந்துபோனாள்

சிறையிலுள்ள கைதிகளை கண்காணிக்கும்
      செங்கோட்டான் குப்பண்ணன் பெயரைச் சொல்லி,
முறையுடனே அரைமாதம் விடுப்புத் தந்து
      முடுக்கிவிட்டார் ! ஊர்நோக்கி வருவ தற்குள்—
குறைவாழ்வில் தவித்திட்ட கன்னி யம்மாள்
      குழந்தைகளைக் கதறிவிட்டுப் போய் விட்டாளே!
நிறைவாழ்வின் கரைகண்டோன் தரையில் வீழ்ந்து

      நெற்றிமோதி அழுகின்றான்; பயன் தான் உண்டோ?

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/100&oldid=1380082" இலிருந்து மீள்விக்கப்பட்டது