பக்கம்:கனியமுது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

எளியதோர் குடும்பம், அதிலோர் மங்கை
தந்தை தூயவர் பணத்தை வெறுப்பவர்
பணமே எல்லா பாதகத்தின் வேர்
பணமே மக்களைப் பாவிக ளாக்கிடும்
பணத்திற் காக அலைந்திட வேண்டாம்
போதுமெனும் மனமே பொன்செய் மருந்து
இந்த விதமான அறிவுரைகள் தன்னை
அந்தப் பெரியவரும் நித்தம் தந்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த அப் பெண்ணும்
எளிய வாழ்க்கையே இன்ப வாழ்க்கையென்
உறுதியாய்க் கொண்டு உலவி வருகின்றாள்.
வாலிபனொருவன் காணுகின்றான். அவளை
வாழ்க்கையில் முன்னேற முயலுபவன் அவனும்
எண்ணம் அவனுக்கு அந்த எழிலாளிடமே
கண் இருந்தும் காளை காணானோ அழகை!

ஓர் நாள் இருவரும் மோட்டாரினில் ஏறி
உல்லாசப் பயணம் செய்யச் செல்கின்றார்.

வழியில், மற்றோர் இளைஞன் வருகின்றான்.

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/107&oldid=1380120" இலிருந்து மீள்விக்கப்பட்டது